அபிஷேக் சர்மா சாதனையை சமன் செய்த இஷான் கிஷன்

சையத் முஷ்டாக் அலி டி20 கோப்பை இறுதிப் போட்டியில் முதன் முதலாக நுழைந்த ஜார்கண்ட் அணி தன் முதல் இறுதிப்போட்டியிலேயே வென்று கோப்பையை வென்று சாதனைப் படைத்துள்ளது,

இந்தத் தொடரில் 5 சதங்களுடன் முன்னிலை வகிக்கும் அபிஷேக் சர்மா சாதனையை அதே 5 சதங்களுடன் இஷான் கிஷன் சமன் செய்தார். இஷான் கிஷன் இறுதிப் போட்டியில் 49 பந்துகளில் அதிரடி சதம் கண்டது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அபிஷேக் சர்மா 54 இன்னிங்ஸ்களில் 5 சதங்கள் எடுக்க, இஷான் கிஷனுக்கு இதே 5 சதங்களுக்கு 62 இன்னிங்ஸ்கள் தேவைப்பட்டுள்ளது.

இவர்களுக்கு அடுத்தபடியாக தேவ்தத் படிக்கல், உன்முக்த் சந்த், ருதுராஜ், உர்வில் படேல், ஸ்ரேயஸ் அய்யர் ஆகியோர் 3 சதங்களை இதே தொடரில் எடுத்துள்ளனர்.

ஹரியானாவுக்கு எதிராக ஜார்கண்ட் எடுத்த 262/3 என்பது, அவர்களின் T20 வரலாற்றிலேயே அதிகபட்ச ஸ்கோர்.

இந்த தொடரில் ஜார்கண்ட் ஐந்து முறை 200 ரன்களைத் தாண்டியது – ஒரே சீசனில் இது இரண்டாவது அதிக எண்ணிக்கை.

பஞ்சாப் இந்த தொடரில் ஏழு முறை 200+ ஸ்கோர்கள் எடுத்துள்ளது – இது எந்த அணியையும் விட அதிகம்.

இந்த தொடருக்கு முன் ஜார்கண்ட் வெறும் மூன்று முறை மட்டுமே 200+ அடித்திருந்தது. ஜார்கண்ட் வெற்றிப் பயணத்தில் எடுத்த ஐந்து 200+ ஸ்கோர்களில் இதுவும் ஒன்று, .

இஷான் கிஷன் சாதனைகள்: சையத் முஷ்டாக் அலி கோப்பை இறுதிப்போட்டியில் சதம் அடித்த இரண்டாவது பேட்ஸ்மேன் இஷான் கிஷன்.

இதற்கு முன் அன்மோல்ப்ரீத் சிங், 2023-24 சீசன் பஞ்சாப் vs பரோடா இறுதிப்போட்டியில் 113 ரன்கள் எடுத்திருந்தார்.

கிஷன் சதம் 45 பந்துகளில் – இது ஆண்கள் T20 இறுதிப்போட்டிகளில் மூன்றாவது வேகமான சதம்.

இதற்கு முன்னர் மிட்செல் ஓவன் (BBL 2024-25 இறுதி): 39 பந்துகளில் சதம் எடுத்திருந்தார். கரன்பீர் சிங் (ஆஸ்திரியா vs ருமேனியா, 2025 புடாபெஸ்ட் கப்): 44 பந்துகளில் சதம் எடுத்திருந்தார்.

இஷான் எடுத்த சையத் முஷ்டாக் அலி கோப்பையின் ஐந்து சதங்களும் விக்கெட் கீப்பராக எடுத்தவை. ஆண்கள் T20 கிரிக்கெட்டில், விக்கெட் கீப்பராக அதிக சதங்கள் எடுத்தவர் க்வின்டன் டி காக் (7). இந்த ஐந்து சதங்களில் நான்கு முறை கிஷன் அணித்தலைவராக இருந்தார் – விக்கெட் கீப்பர்-கேப்டனாக அதிக சதங்கள் எடுத்தவர் இவரே.

புனேவில் நடைபெற்ற ஜார்கண்ட் / ஹரியானா போட்டியில், இரு அணிகளும் சேர்ந்து 455 ரன்கள் எடுத்தன – இது T20 நாக்அவுட் போட்டிகளில் மிக அதிகமான மொத்த ஸ்கோர். முந்தைய சாதனை: மும்பை / விதர்பா – 445 ரன்கள் (கடந்த சீசன் காலிறுதி).

இறுதிப் போட்டியில் மொத்தம் 33 சிக்சர்கள், இதில் ஜார்கண்ட் அணி 20 சிக்சர்களையும் ஹரியானா அணி 13 சிக்சர்களையும் அடித்தது.

இஷான் கிஷன் இந்த சீசனில் 517 ரன்கள் எடுத்தார். இது 3வது அதிகபட்ச தனி வீரர் எடுத்த ரன்களாகும். தேவ்தத் படிக்கல் 2019-20 சீசனில் 580 ரன்களையும் ரோஹன் கடம் 2028-19 தொடரில் 536 ரன்களையும் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தொடரில் 20 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன, இதுவரை இல்லாத அதிகபட்ச சத எண்ணிக்கை இதுவே.

அதே போல் இந்த சீசனில் மொத்தம் 1884 சிக்சர்கள் விளாசப்பட்டுள்ளன, இது கடந்த சீசனின் 1855 சிக்சர்களைக் கடந்த இன்னொரு சாதனை.

ஜார்கண்டின் பவுலர் சுஷாந்த் மிஷ்ரா 22 விக்கெட்டுகளுடன் இந்தத் தொடரில் முதலிடம் வகிக்கிறார். ஹரியானாவின் அன்ஷுல் காம்போஜ் 21 விக்கெட்டுகள்.

அதே போல் அன்குல் ராய் இந்தத் தொடரில் 303 ரன்களையும் 18 விக்கெட்டுகளையும் 9 கேட்ச்களையும் எடுத்து சாதனை புரிந்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *