அனுமன் ஜெயந்தி – நைவேத்திய பொருட்களும்… பலன்களும்…

அனுமன் ஜெயந்தி இன்று கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் பக்தர்கள் பலரும் விரதம் இருந்து ஆஞ்சநேயரை வழிபடுவார்கள்.

ராமா என சொல்லுகின்ற இடத்தில் எல்லாம் அனுமன் இருப்பது நிச்சயம் என்பது ஐதீகம். அனுமன் இருக்கும் இடத்தில் வெற்றியைத் தவிர வேறொன்றும் இல்லை என்பது நம்பிக்கையாகும்.

அனுமன் ஜெயந்தியான இன்று விரதம் இருப்பவர்கள் அதிகாலை குளித்து, ராம நாமம் சொல்லி வணங்கி, உபவாசம் தொடங்க வேண்டும். அருகில் இருக்கும் ராமர் அல்லது அனுமன் கோவிலுக்குச் சென்று, அனுமனுக்குத் துளசி மாலை, வெற்றிலை மாலை சாத்தி வழிபடலாம். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.

அனுமன் ஜெயந்தி அன்று, அனுமனை வழிபடும்போது அவருக்கு பிடித்த நைவேத்தியப் பொருட்களை படைத்து வழிபட்டால் சிறப்பான பலன்களை பெறலாம்.

துளசி மாலை – ராமபிரான் கடாட்சம் பெற்று நற்கல்வி, செல்வம் பெறலாம்.

வெற்றிலை – விருப்பங்கள் நிறைவேறும்.

மல்லிகை – கெட்ட சக்திகள் விலகும்.

வடைமாலை – துன்பங்கள் நீங்கும்.

சந்தனம் – மங்களகரமான வாழ்க்கை அமையும்.

செந்தூரம் – அறிவும், ஆற்றலும் பெருகும்.

வீட்டில் அனுமன் படம் வைத்து அஷ்டோத்திரங்கள் சொல்லி பூஜை செய்து, வெண்ணெய், உளுந்துவடை, பொரி, பழம், அவல், கடலை, சர்க்கரை, தேன், பானகம், இளநீர் போன்றவைகளை நைவேத்தியம் செய்யலாம். ஸ்ரீராமஜெயம் என எழுதுவதும் நல்ல பலன்களை அளிக்கும்.

அனுமன் ஜெயந்தி அன்று விரதம் இருந்தால் சகல மங்களங்களும் உண்டாகும், நினைத்த காரியம் கைகூடும், வாழ்க்கையில் நலம் பெருகும்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *