அரசியலில் இருந்தே விலகுகிறேன் – குன்னம் ராமச்சந்திரன் எடுத்த திடீர் முடிவு!

சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அ.தி.மு.க. உட்கட்சி மோதலினால் பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக செயல்பட்ட பலரும் தற்போது திமுகவில் இணைந்து வருகின்றனர்.

அந்த வகையில், மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ் ஆகியோரை தொடர்ந்து நேற்று தி.மு.க.வில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம். தனது எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்தார்.

அவரைத்தொடர்ந்து அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வும், ஓபிஎஸ்-ன் ஆதரவாளருமான குன்னம் ராமச்சந்திரனும் விரைவில் திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், அரசியல் பொது வாழ்க்கையில் இருந்து விலகுவதாக குன்னம் ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்.

எந்த அரசியல் கட்சியிலும் இணையும் எண்ணமில்லை எனவும், குடும்பத்தினர் கூறியதால் திமுகவில் இணையும் முடிவிலிருந்து பின்வாங்கினேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

யார் இந்த குன்னம் ராமச்சந்திரன்?
அ.தி.மு.க. சார்பில் குன்னம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து 2016-ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2021 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் குன்னம் தொகுதியில் போட்டியிட்டார், ஆனால் அப்போது திமுக வேட்பாளராக இருந்த அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கரிடம் 6,329 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

அதிமுகவில் பெரம்பலூர் மாவட்டச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
பின்னர் அ.தி.மு.க உட்கட்சி மோதலால் ஓ. பன்னீர்செல்வம் அணியில் இருந்துவரும் இவர், அரசியல் பொது வாழ்க்கையில் இருந்து தற்போது விலகியுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *