மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்!!

மேட்டூர்:
மேட்டூர் அணையி​லிருந்து காவிரி டெல்டா பாசனத்​துக்கு நீர் திறப்பு நேற்று மாலை நிறுத்​தப்​பட்​டது. டெல்டா பாசனத்​துக்கு 221.96 டிஎம்சி தண்​ணீர் வழங்​கப்​பட்​டுள்​ள​தாக அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

டெல்டா மாவட்​டங்​களில் குறு​வை, சம்​பா, தாளடி சாகுபடிக்​காக மேட்டூர் அணையி​லிருந்து ஆண்​டு​தோறும் ஜூன் 12 முதல் ஜனவரி 28 வரை 230 நாட்​களுக்கு 330 டிஎம்சி நீர் தேவைப்​படும். கடந்த ஜூன் 12-ம் தேதி அணையி​லிருந்து தண்​ணீர் திறக்​கப்​பட்​டது.

நீர்ப்​பிடிப்பு பகு​தி​களில் பெய்த மழை, கர்​நாடக அணை​களில் நீர் திறப்பு உள்​ளிட்ட காரணங்​களால் காவிரி​யில் வெள்​ளப் பெருக்கு ஏற்​பட்​டு, மேட்டூர் அணை நடப்பு நீர்ப்​பாசன ஆண்​டில் 7 முறை நிரம்​பியது.

தொடர்ந்​து, பாசனத் தேவையை பொறுத்து நீர் திறப்பு அதி​கரிக்​கப்​பட்​டும், குறைக்​கப்​பட்​டும் வந்​தது. இதனிடையே, சில நாட்களாக டெல்டா பாசனத்​துக்கு அணையி​லிருந்து விநாடிக்கு 7,000 கனஅடி நீர் திறக்​கப்​பட்டு வந்த நிலை​யில் நேற்று முன்​தினம் மாலை 1,000 கனஅடி​யாக குறைக்​கப்​பட்​டது.

இந்நிலை​யில், 230 நாட்​களுக்குப் பிறகு அணையி​லிருந்து டெல்டா பாசனத்​துக்கு நீர் திறப்பு நேற்று மாலை நிறுத்​தப்​பட்​டது. இதுகுறித்து நீர்​வளத்​துறை அதி​காரி​கள் கூறும்​போது, “கடந்த 230 நாட்​களில் அணையி​லிருந்து டெல்டா பாசனத்​துக்கு 221.96 டிஎம்சி தண்​ணீர் திறக்​கப்​பட்​டுள்​ளது. கால்​வாய் பாசனத்​துக்கு 8.6 டிஎம்சி நீர் திறக்​கப்​பட்​டுள்​ளது.

7 முறை உபரிநீர் வெளியேற்றம்: அணை முழு கொள்​ளள​வான 120 அடியை எட்​டும்​போது, 16 கண் மதகு​கள் வழி​யாக 7 முறை உபரிநீர் வெளி​யேற்​றப்​பட்​டுள்​ளது. மொத்​தம் 96.57 டிஎம்சி தண்ணீர் உபரிநீர் போக்கி வாயி​லாக திறக்​கப்​பட்​டுள்​ளது” என்​றனர்.

மேட்டூர் அணைக்கு நேற்று 53 கனஅடி தண்​ணீர் வந்​தது. அணை நீர்​மட்​டம் 92.91 அடி​யாக​வும், நீர் இருப்பு 56.04 டிஎம்​சி​யாக​வும் இருந்​தது. குடிநீர் தேவைக்​காக விநாடிக்கு 800 கனஅடி தண்​ணீர் திறக்​கப்​பட்டு வரு​கிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *