திரு​வொற்​றியூர் நெடுஞ்சாலைக்கு ‘வள்ளலார் நெடுஞ்​சாலை’ என பெயர் சூட்​டப்​படும் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!!

சென்னை: ​
திரு​வொற்​றியூர் நெடுஞ்சாலைக்கு ‘வள்ளலார் நெடுஞ்​சாலை’ என பெயர் சூட்​டப்​படும் என்று தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தெரி​வித்​துள்​ளார்.

வள்ளலார் தினத்​தையொட்டி நேற்று தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் சமூக வலை​தளப் பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது:

வள்ளலார் பிறந்​த​நாள் தனிப்​பெரும் கருணை நாள்; ஓராண்டு தொடர் கொண்​டாட்​ட​மாக வள்ளலார் முப்​பெரும் விழா; வள்ளலார் வாழ்ந்த மருதூர் இல்​லம் புனரமைப்பு என வள்​ளலாரின் புகழைப் போற்​று​வதன் தொடர்ச்​சி​யாக, அயல் நாட்​டினரிட​மும் வள்​ளலாரின் உயரிய கருத்​துகளை கொண்டு சேர்க்க, வரும் பிப்​ர​வரி 15-ம் தேதி சென்னை கீழ்ப்​பாக்​கம் ஏகாம்​பர​நாதர் பள்ளி வளாகத்​தில் ‘அனைத்​துலக வள்ளலார் மாநாடு 2026’ நடத்​தப்​படும்.

மேலும், வள்ளலார் நெறி​யாளர்​களின் கோரிக்​கையை ஏற்​று, திரு​வொற்​றியூர் நெடுஞ்​சாலைக்கு ‘வள்ளலார் நெடுஞ்​சாலை’ என பெயர் சூட்​டப்​படும். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.

டிடிவி தினகரன்: அமமுக பொதுச் செய​லா​ளர் டிடிவி தினகரன் சமூகவலை​தளப் பதி​வில், “இறைவன் ஒளி வடிவ​மானவர் என்​பதை மக்​களிடம் கொண்டு சேர்க்க சத்​திய ஞான சபையை நிறுவிய வரும், ஏழை, எளிய மக்களின் பசிப்​பிணியை போக்கு​வதே ஆகச்​சிறந்த இறைப்​பணி என்​ப​தில் உறு​தி​யாக இருந்​தவரு​மான அருட்​பெருஞ்​ஜோதி வள்ளலார், ஜோதி வடி​வான தினம் இன்று (நேற்​று).

தன்னை நாடி வந்த அன்​பர்​களுக்கு ஆண்​ட​வரை அடை​யும் அருளியலை வழங்​கு​வதோடு, தேனினும் இனிய திரு​வருட்​பாக்​களின் மூலம் மனிதகுலம் நீடூழி வாழ்​வதற்​கான ஒழுக்க நெறி​முறை​களை​யும் போதித்த வள்​ளலாரை எந்​நாளும் நினை​வில் வைத்து போற்​று​வோம்” என்று தெரி​வித்​துள்​ளார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *