மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு தமிழக அரசு ரூ.12 கோடி நிதி அறி​வித்​த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!!

சென்னை:
மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு தமிழக அரசு ரூ.12 கோடி நிதி அறி​வித்​து, உடனடி​யாக பணி​கள் தொடங்​கப்​பட்​டுள்​ளன.

‘மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை கட்​டிடம் மூடல் -நோயாளி​களை செங்​கல்​பட்​டுக்கு அனுப்​பும் அவலம்’ என்ற தலைப்​பில் செய்தி வெளி​யானது.

‘செங்​கல்​பட்டு மாவட்​டம் மது​ராந்​தகத்​தில் உள்ள அரசு வட்​டார தலைமை மருத்துவமனையில் உயர்தர சிகிச்சை வசதி இல்​லாத​தால், நோயாளி​களை 30 கி.மீ. தொலை​வில் உள்ள செங்​கல்​பட்டு அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்துவமனைக்கு அனுப்​பும் நிலை உள்​ளது.

55 ஆண்​டு​கள் பழமை​யான கட்​டிடத்​தில் அறுவை சிகிச்சை அரங்​கம் செயல்​பட்டு வந்​தது. கட்​டிடத்​தின் அஸ்​தி​வாரம் பலவீனமடைந்​துள்​ள​தால், கட்​டிடம் மூடப்​பட்​டுள்​ளது. இதனால், அறுவை சிகிச்சை நிறுத்​தப்​பட்​டுள்​ளது.

அறுவை சிகிச்சை தேவைப்​படும் நோயாளி​கள் செங்​கல்​பட்டு அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்துவமனைக்கு பரிந்​துரைக்​கப்​படும் நிலை உள்​ளது.

புதிய கட்​டிடம் அமைக்க நிதி ஒதுக்​கி, விரை​வாக கட்​டிடம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்​டும்’ என்று அந்த செய்​தி​யில் தெரிவிக்​கப்​பட்​டிருந்​தது.

இதுகுறித்து தமிழக சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் வெளி​யிட்ட செய்​திக்குறிப்​பு: ‘மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிக்சை கட்​டிடம் மூடல் என்ற செய்தி வெளிவந்​துள்​ளது.

இதை பார்த்​தவுடன், தமிழக முதல்​வர் ஸ்​டா​லின் என்​னிடம் கேட்​டறிந்​து, உடனடி​யாக தீர்வு காண உத்​தர​விட்​டார். நானும், சுகா​தா​ரத் துறை செயலர் ப.செந்​தில்​கு​மாரும் இதுகுறித்து விசா​ரித்தோம்.

இதையடுத்​து, தேசிய நலவாழ்​வுக் குழும நிதி​யில் இருந்து மதுராந்தகம் அரசு மருத்துவமனையின் அறுவை சிகிச்சை அரங்கு கட்​டிடத்​துக்கு ரூ.10 கோடி, மருத்​துவ உபகரணங்​களுக்கு ரூ.2 கோடி என மொத்​தம் ரூ.12 கோடி நிதி உடனடி​யாக அறிவிக்​கப்​பட்​டு, அதற்​கான பணி​கள் தொடங்​கப்​பட்டு இதற்கு தீர்வு காணப்​பட்​டுள்​ளது என்று அவர் தெரி​வித்​துள்​ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *