புதுடெல்லி:
ஃபயர் ஓபன் ஸ்குவாஷ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதிச் சுற்றுக்கு இந்திய வீராங்கனை அனாஹத் சிங் முன்னேறியுள்ளார்.
ஃபயர் ஓபன் ஸ்குவாஷ் போட்டி அமெரிக்காவின் வாஷிங்டனில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற கால் இறுதிப் போட்டியில் அனஹத் சிங்கும், எகிப்து வீராங்கனை சானா இப்ராஹிமும் மோதினர்.
இதில் அனஹத் சிங் 8-11 8-11 11-7 11-8 11-7 என்ற புள்ளிகள் கணக்கில் சானா இப்ராஹிமை வீழ்த்தி அரை இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். அரை இறுதிச் சுற்றில், அமெரிக்க வீராங்கனை சப்ரினா சோபியை எதிர்த்து விளையாடவுள்ளார் அனஹத் சிங்.
அதேநேரத்தில் ஆடவர் ஒற்றையர் கால் இறுதிச் சுற்றில் இந்திய வீரர் வீர் சோட்ராணி தோல்வி கண்டு வெளியேறினார்.
கால் இறுதியில் இங்கிலாந்து வீரர் டெக்லான் ஜேம்ஸ் 8-11 11-6 14-12 11-9 என்று புள்ளிகள் கணக்கில் வீர் சோட்ராணியை வென்றார்.