நல்ல பழக்கங்கள், கடின​மான தேர்​வு​களை எதிர்​கொள்ள உதவும் – பள்ளி மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்​.ரவி அறிவுரை!!

திருவள்ளூர்:
நல்ல பழக்கங்கள், கடின​மான தேர்​வு​களை எதிர்​கொள்ள உதவும் என்று ஆளுநர் ஆர்​.என்​.ரவி கூறி​னார்.

பள்ளி மாணவர்​களிடம் மன அழுத்​தம் இல்​லாத சூழலை உரு​வாக்க பிரதமர் மோடி தலை​மை​யில் ‘தேர்வு வீரர்​கள்’ என்ற இயக்​கம் செயல்​படுத்​தப்​பட்டு வரு​கிறது. அந்த இயக்​கம் சார்​பில் ‘பரிக் ஷா பே சர்ச்​சா’ என்ற நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சி நேற்று நடை​பெற்​றது.

இதன்​படி, திரு​வள்​ளூர் மாவட்​டம் திரு​வேற்​காடு பகு​தி​யில் உள்ள ஆர்​எம்கே பள்​ளி​யில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் ஆளுநர் ஆர்​.என்​.ரவி சிறப்பு அழைப்​பாள​ராகப் பங்​கேற்​று, 1,500-க்​கும் மேற்​பட்ட மாணவ, மாணவி​களு​டன் கலந்​துரை​யாடி​னார்.

அப்​போது ஆளுநர் பேசி​ய​தாவது: மாணவ, மாண​விகள் அதி​காலை​யில் எழுந்​து, உடற்​ப​யிற்​சி, யோகா செய்ய வேண்​டும். தின​மும் கடின​மான பாடங்​களைப் படிக்க வேண்​டும். நல்ல பழக்கங்கள், கடின​மான தேர்​வு​களை எதிர்​கொள்ள உதவி​யாக இருக்​கும்.

வினாத்​தாளை வாங்​கியதும், தெரி​யாத கேள்வி​களைப் பார்த்து பதற்றப்​படக் கூடாது. நாம் நினைத்​தது நடை​பெறா​விட்​டல், அதை தோல்​வி​யாக கருதக் கூடாது. சிறு பின்​னடை​வாக கருத வேண்​டும்.

மீண்​டும் முயற்சி செய்​து, நினைத்​ததை முடிக்​கவேண்​டும். சாதனை​யாளர்​களின் சுயசரிதையைப் படித்​து, அதை ஊக்​க​மாக எடுத்துக் கொள்​ளுங்​கள்.இவ்​வாறு அவர் பேசி​னார்.

தொடர்ந்​து, தேர்வை தைரிய​மாக எதிர்​கொள்​வது குறித்து பிரதமர் மோடி எழு​திய ‘தேர்வு வீரர்​கள்’ என்ற புத்​தகத்​தை, மாணவ, மாணவி​களுக்கு ஆளுநர்​ ஆர்​.என்​.ர​வி வழங்​கி​னார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *