தலைமை ஆசிரியை குப்புறப்படுத்து மொபைல் பார்க்க, மாணவிகள் அவருக்கு மசாஜ் செய்து கொண்ட வீடியோ வைரல்!!

உத்தரப்பிரதேசம்;
உத்தரப்பிரதேச மாநிலம் சித்ரகூட் மாவட்டத்தில் தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை வகுப்பறையில் தரையில் படுத்துக்கொண்டிருக்க மாணவிகளை வைத்து உடல் மசாஜ் செய்துகொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.

தலைமை ஆசிரியை குப்புறப்படுத்து மொபைல் பார்க்க, மாணவிகள் அவருக்கு மசாஜ் செய்து விடுவது அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது.

இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து பெற்றோர்களும் பொதுமக்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


மண்டல கல்வி அதிகாரி அலுவலகம் அமைந்துள்ள அதே வளாகத்தில்தான் இந்தப் பள்ளியும் உள்ளது.

இவ்வளவு அருகில் இருந்தும் இத்தகைய ஒழுங்கீனமான செயல் நடந்திருப்பது அதிகாரிகளின் கண்காணிப்பு குறைபாட்டையே காட்டுகிறது என விமர்சனங்கள் எழுந்துள்ளன.


வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, மாவட்டத் தொடக்கக் கல்வி அதிகாரி இந்தச் சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

குற்றச்சாட்டுகள் உண்மையாக இருக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியை மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *