பவுனுக்கு ரூ.800 குறைவு….. மீண்டும் சரிந்த தங்கம் விலை!!

சென்னை:
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் சரிந்துள்ளது. சென்னையில் இன்று (மார்ச் 9) காலை வர்த்தகம் தொடங்கியதும் பவுனுக்கு ரூ.800 என விலை குறைந்தது.

சர்​வ​தேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு, உலக பங்குச் சந்தை முதலீடுகள் உள்ளிட்டவற்றின் அடிப்படை​யில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது.

இந்தச் சூழலில், தொடர்ச்சியாக தங்கம் விலை உயர்ந்தும் குறைந்தும் வரு​கிறது. உலக நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ரீதியான உறவு இதற்கு முக்கிய காரணம் என துறை சார்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஈரான் – அமெரிக்கா, இஸ்ரேல் இடையிலான போர் காரணமாக தங்கத்தின் விலையில் பெரிய அளவில் தாக்கம் ஏற்பட்டுள்ளது. போர் காரணமாக இந்திய பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி கண்டுள்ளது.

கடந்த 2-ம் தேதி முதல் தங்கம் விலை சரிவில் இருந்தது. இந்த சூழலில் கடந்த 7-ம் தேதி அன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.90, பவுனுக்கு ரூ.720 என உயர்ந்தது. இந்நிலையில், சென்னையில் இன்று தங்கம் விலை மீண்டும் குறைந்துள்ளது.

இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,950-க்கும், பவுனுக்கு ரூ.800 குறைந்து, ஒரு பவுன் ரூ.1,19,600-க்கும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை இன்று மாற்றமின்றி விற்பனை ஆகிறது. வெள்ளி ஒரு கிராம் ரூ.290-க்​கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.5,000-க்கும் விற்பனை ஆகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *