ரூ.155.81 கோடி​யில் சார்​ப​திவு அலு​வல​கங்​கள், அடுக்​கு​மாடி குடி​யிருப்​பு​கள், அலு​வலக கட்​டிடங்​களை காணொலி மூலம் திறந்​து வைத்த முதல்​வர் ஸ்டாலின்!!

சென்னை:
ப​திவுத்​துறை, ஊரகவளர்ச்​சித்​துறை, நகர்ப்​புற வாழ்​விட மேம்​பாட்டு வாரி​யம் ஆகியவை சார்​பில் ரூ.155.81 கோடி​யில் சார்​ப​திவு அலு​வல​கங்​கள், அடுக்​கு​மாடி குடி​யிருப்​பு​கள், அலு​வலக கட்​டிடங்​களை முதல்​வர் ஸ்டாலின் நேற்று திறந்​து வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: கோயம்​புத்​தூர்– கிணத்​துக்​கட​வு, சூலூர், தூத்​துக்​குடி – ஏரல், விழுப்​புரம் -திரு​வெண்​ணைநல்​லூர், திரு​வள்​ளூர் – பொன்​னேரி, திருப்​பத்​தூர் – 2 எண் இணை சார்​ப​தி​வாளர் அலு​வல​கம் மற்​றும் சிவகங்கை – திருப்​புவனம் என ரூ.14.92 கோடி​யில் பதிவுத்​துறைக்கு கட்​டப்​பட்​டுள்ள 7 புதிய சார்​ப​தி​வாளர் அலு​வல​கக் கட்​டிடங்​களை முதல்​வர் ஸ்டாலின் காணொலி​யில் திறந்​தார்.

இதுத​விர, கோயம்​புத்​தூர் (வடக்​கு) பதிவு மாவட்​டத்​தில் புதி​ய​தாக உரு​வாக்​கப்​பட்ட சர்க்​கார்​சாமக்​குளம் சார்​ப​தி​வாளர் அலு​வல​கம், 22 கிராமங்களை உள்​ளடக்கி புதிதாக உருவாக்கப்பட்ட பாப்​பாரப்​பட்டி சார்​ப​தி​வாளர் அலு​வல​கம் ஆகிய​வற்​றை​யும் முதல்​வர் நேற்று திறந்​தார்.

மேலும், ஊரக வளர்ச்சி மற்​றும் ஊராட்​சித் துறை சார்​பில் ரூ.78 .41 கோடி​யில் ராம​நாத​புரம்-வல்​லி​மாடன்​வலசை​யில் கட்​டப்​பட்​டுள்ள சமத்​து​வபுரம், நாமக்கல், வையப்​பமலை​யில் அமைக்​கப்​பட்​டுள்ள சுப்​ரமணியசாமி கோ​யில் மலைச்​சாலை மற்​றும் ஊரக வளர்ச்சி மற்​றும் ஊராட்​சித் துறை அலு​வல​கக் கட்டிடங்​கள், பொது சுகா​தார கட்டிடங்​கள், சமு​தாயக் கூடங்​கள், பள்​ளிக் கட்​டிடங்​களை​யும் திறந்​தார்.

இதுத​விர, கோயம்​புத்​தூர், அவி​னாசி பிர​தான சாலை​யில் உள்ள வஉசி பூங்​கா​வில் ரூ.50 லட்​சம் செல​வில் நிறு​வப்​பட்​ட ஜி.டி. நாயுடு சிலையையும் முதல்​வர் திறந்​தார்.

மேலும், நகர்ப்புற வாழ்​விட மேம்​பாட்டு வாரி​யம் சார்​பில் மதுரை​யில் சுப்​பிரமணி​யபுரம் திட்​டப் பகு​தி​யில் ரூ.62.68 கோடி​யில் கட்​டப்​பட்ட 396 புதிய அடுக்​கு​மாடி குடி​யிருப்​பு​களை திறந்து வைத்​தார்.

கடந்த 5 ஆண்​டு​களில் 210 திட்​டப் பகு​தி​களில் 74,522 அடுக்​கு​மாடி குடி​யிருப்​பு​கள் திறக்​கப்​பட்​டுள்​ளன.

இந்நிகழ்ச்சியில், அமைச்​சர்​கள் ஐ.பெரியசாமி, தா.மோ.அன்​பரசன், மு.பெ.சாமி​நாதன், பி.மூர்த்​தி, தலை​மைச்​ செயலர் நா.​முரு​கானந்​தம் உள்​ளிட்டோர் பங்​கேற்றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *