தமிழகத்​தில் ஆர்டர்லி நடை​முறை இன்​னும் தொடர்ந்​தால் சம்​பந்​தப்​பட்ட அதி​காரிகள் மட்​டுமின்றி ஆட்சி​யர்​கள் மீதும் பணிவிதி​களின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தர​விடப்​படும் – ஐகோர்ட் எச்சரிக்கை!!

சென்னை:
தமிழகத்​தில் ஆர்டர்லி நடை​முறை இன்​னும் தொடர்ந்​தால் சம்​பந்​தப்​பட்ட அதி​காரிகள் மட்​டுமின்றி ஆட்சி​யர்​கள் மீதும் பணிவிதி​களின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தர​விடப்​படும் என நீதிப​தி​கள் எச்சரித்துள்ளனர்.

தமிழகத்​தில் காவல்​ துறை மற்​றும் சிறைத் ​துறை​யில் ஆர்டர்லி முறையை முற்​றி​லு​மாக ஒழிப்​பது தொடர்​பான வழக்கு நீதிப​தி​கள் எஸ்​.எம்​.சுப்​ரமணி​யம், கே.சுரேந்​தர் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது தமிழகத்​தில் ஆர்டர்லி முறையை ஒழித்து அரசாணை பிறப்​பிக்​கப்​பட்​டுள்​ள​தாக​வும், இந்த அரசாணை​யின் அடிப்​படை​யில் ஆர்டர்லி முறை மாநிலம் முழு​வதும் முழு​மை​யாக ஒழிக்​கப்​பட்டு இருப்​பதை உறுதி செய்ய காவல்​துறை அதி​காரி​களுக்​கும் அறி​வுறுத்​தல்​கள் வழங்​கப்​பட்​டுள்​ள​தாக​வும் தமிழக அரசு தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது.

அதையடுத்து ஆர்டர்லி முறை தொடர்​பாக வரும் புகார்​கள் மீது விசா​ரணை நடத்தி உடனடி​யாக நடவடிக்கை எடுக்க வேண்​டுமென அனைத்து மாவட்ட ஆட்​சி​யர்​களுக்​கும் உத்​தர​விட்ட நீதிப​தி​கள், “இந்த விவ​காரத்​தில் உயர​தி​காரி​கள் கூட்​டணி அமைத்து செயல்​பட்​டால் கடுமை​யாக கருதப்​படும்” என்​றனர்.

மேலும், “ஆர்டர்லி நடை​முறையை ஒழிக்​கும் கொள்​கையை அமல்​படுத்​த​வில்லை என்​றால், ஆட்​சி​யர்​கள் மட்​டுமல்​லாது சம்​பந்​தப்​பட்ட காவல்​துறை அதி​காரி​கள் மீதும் நடவடிக்கை எடுக்க உத்​தர​விடப்​படும்” என எச்​சரித்து வி​சா​ரணையை மார்ச் 23-க்​கு தள்​ளி​வைத்​துள்​ளனர்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *