விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜூலை 10-ம் தேதி நடைபெறும்!!

ஜூலை 10ம் தேதி விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் 14-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி, வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசிநாள் ஜூன் 21-ம் தேதி முடிவடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வேட்புமனுக்கள் மீது ஜூன் 24-ம் தேதி பரிசீலனை; மனுக்களை வாபஸ் பெற ஜூன் 26-ம் தேதி கடைசிநாள் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *