வெல்லும் பெண்கள் என்ற பெயரில் வெட்கமே இல்லாமல் இந்த ஆட்சியினர் விளம்பரம் தேடுகின்றனர் – விந்தியா!!

கோவை:
கோவையில் அ.தி.மு.க. சார்பில் நடந்த மகளிர் தினவிழாவில் நடிகை விந்தியா பேசியதாவது:-


ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் ஞாபகம் இருக்கிற அளவுக்கு இந்த 5 ஆண்டுகளில் நாங்கள் சாதனை செய்துள்ளோம் என மைக்கிலேயே மேகி கிண்டுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

அப்படி என்ன சாதனைகள் செய்து விட்டார் என்று யோசித்து பார்த்தேன். இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து 79 ஆண்டுகளில் எந்த அரசும் 5 ஆண்டுகளில் ரூ.6 லட்சம் கோடி கடன் வாங்கியது இல்லை.

ஆனால் 5 ஆண்டுகளில் ரூ.6 லட்சம் கோடி கடன் வாங்கியது தான் தி.மு.க அரசின் சாதனை.

காமராஜர் காலத்தில் இருந்து எடப்பாடியார் காலம் வரையிலான ஆட்சியில் மாணவர்கள் பள்ளிக்கு சென்று படித்தனர்.

ஆனால் இந்த 5 ஆண்டு தி.மு.க. ஆட்சியில் மாணவர்கள் போதையில் சுற்றி கொண்டு குற்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். இதுதான் இந்த தி.மு.க அரசின் சாதனை.

இதுபோன்ற சாதனைகள் செய்துள்ள பெருமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கே உண்டு. இதற்கு மேல் தி.மு.க. தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் தி.மு.க இருக்கும். ஆனால் தமிழ்நாடு இருக்காது.

தி.மு.க. பல்லு முளைக்காத குழந்தை முதல் பல்லு போன மூதாட்டி வரை யாருக்கும் எந்தவிதமான பாதுகாப்பும் இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பாக இருப்பதாக முதலமைச்சர் கூறுகிறார்.

வெல்லும் பெண்கள் என்ற பெயரில் வெட்கமே இல்லாமல் இந்த ஆட்சியினர் விளம்பரம் தேடுகின்றனர். விளம்பரம் தேடுவதிலேயே தான் இந்த ஆட்சியினர் குறிக்கோளாக உள்ளனர்.


இன்று தி.மு.க ஆட்சியில் இருப்பதற்கு காரணம் பெண்கள் தான். ஆனால் அந்த பெண்களுக்கே இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லை.

போனமுறை எத்தனையோ பொய்யான வாக்குறுதிகளை சொல்லி, மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்து விட்டனர். இப்பவும் கட்டு, கட்டாக, பொய்களை தூக்கி கொண்டு வருவார்கள். யாரும் அவர்களை நம்பாதீர்கள்.

தி.மு.க.வினர் உண்மையான விஷயங்களை எப்போதும் சொல்லமாட்டார்கள். அவர்களுக்கு அது தெரியாது. நேருக்கு நேர் நின்று சண்டை போடுவதற்கு தி.மு.க.வுக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் தெரியாது. இவ்வாறு அவர் பேசினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *