சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச்சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு உத்தரவிட வேண்டும் – திமுக மனு!!
சென்னை:
உயர் நீதிமன்றத்தில் திமுக எம்.பி. கிரிராஜன் தொடர்ந்த வழக்கில் கூறியுள்ளதாவது: வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவிப்பில் ஈடுபட்டதாகவும், டெண்டர் முறைகேடு செய்ததாகவும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.காமராஜ், கே.சி.வீரமணி, கே.பிஅன்பழகன், அதிமுக முன்னாள் எம்எல்ஏ தி.நகர் சத்யா மற்றும் சேலம் இளங்கோவன் ஆகியோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளன.
இதுபோன்ற விவகாரங்களில் அமலாக்கத்துறை விசாரணை நடத்த முடியும். ஆனால், பலமுறை மனு அனுப்பியும் அதிமுகவினர் 9 பேர் மீது அமலாக்கத் துறை நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச்சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கோரியுள்ளார்.