புதுச்சேரியில் தவெக உடன் கூட்டணி சேர்ந்த நேயம் மக்கள் கழகத்திற்கு “உருளையன்பேட்டை” மற்றும் “தட்டாஞ்சாவடி” ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கீடு!!

சென்னை:
புதுச்சேரியில் கூட்டணி கட்சியான நேயம் மக்கள் கழகத்திற்கு “உருளையன்பேட்டை” மற்றும் “தட்டாஞ்சாவடி” ஆகிய 2 தொகுதிகள், ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது.

இது குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், புதுச்சேரி மாநில வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, “நேயம் மக்கள் கழகம்” நிறுவனத் தலைவர் நேரு (எ) குப்புசாமி MLA, தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளில் “உருளையன்பேட்டை” மற்றும் “தட்டாஞ்சாவடி” ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகள், கூட்டணியில் சேர்ந்துள்ள நேயம் மக்கள் கழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளன என்பதை வெற்றித் தலைவர் ஒப்புதலோடு தெரிவித்துக் கொள்கிறோம்” என்று என்.ஆனந்த் கூறியுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *