இனியும் ஏவல் துறையாக இல்லாமல், திருநெல்வேலி விவசாயி கொலை வழக்கில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்!!

சென்னை:
இனியும் ஏவல் துறையாக இல்லாமல், திருநெல்வேலி விவசாயி கொலை வழக்கில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்: “திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்புப் பகுதியில் பட்டியலின விவசாயி ஆறுமுகம் கொலை செய்யப்பட்டு ஆறு நாட்களாகியும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாத விரக்தியில் அவரது மகள் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

கொலை செய்த குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காமல் காவல்துறை மெத்தனமாகச் செயல்பட்டதால், இன்று மேலும் ஒரு அப்பாவி உயிர் பலியாகியுள்ளது.

திறனற்ற திமுக ஆட்சியில் கடந்த ஐந்தாண்டுகளாகக் குற்றங்கள் பெருகிய போதெல்லாம் வேடிக்கை பார்த்த கொடூரம் போதாதென்று, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பின்பும், வேடிக்கை பார்க்கிறதா தமிழகக் காவல்துறை?

இன்னும் 30 நாட்களில் இருந்த இடம் தெரியாமல் திமுக அரசைத் தமிழக மக்கள் தூக்கியெறியவுள்ள நிலையில், இனியும் ஏவல் துறையாகச் செயல்படாது, தமிழகக் காவல்துறை உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்! சட்டம் ஒழுங்கை உறுதி செய்ய வேண்டும்! ” என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *