ஆந்​தி​ரா​விலிருந்து ஐம்​பொன் சிலை வாங்க, சென்னை வந்த 4 பேரிட​மிருந்து உரிய ஆவணங்​கள் இல்​லாமல் கொண்டு வரப்​பட்ட ரூ.1.90 லட்​சம் பறி​முதல்!!

சென்னை:
ஐம்​பொன் சிலை வாங்க, ஆந்​தி​ரா​விலிருந்து சென்னை வந்த 4 பேரிட​மிருந்து உரிய ஆவணங்​கள் இல்​லாமல் கொண்டு வரப்​பட்ட ரூ.1.90 லட்​சம் பறி​முதல் செய்​யப்​பட்​டது.

சென்​னை, மாதவரம் ரவுண்​டானா அருகே நேற்​று​முன்​தினம் இரவு தேர்​தல் பறக்​கும் படை​யினர் தீவிர வாகன சோதனை​யில் ஈடு​பட்​டனர். அப்​போது, அந்த வழி​யாக வந்த சொகுசு கார் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை நடத்​தினர்.

அதில், உரிய ஆவணங்​கள் இன்றி ரூ.1.90 லட்​சம் இருந்​தது தெரிந்​தது. அதை பறக்​கும் படை அதி​காரி​கள் பறி​முதல் செய்​தனர். பின்​னர், காரில் பயணம் செய்த 4 பேரை பிடித்து விசா​ரித்​தனர்.

இதில், அவர்​கள் ஆந்​திர மாநிலம் கடப்பா மாவட்​டத்தை சேர்ந்த நாகேஸ்​வர​ராவ், சுதா, சுப்​பா​ராவ், வெங்​கடேஷ்வர​ராவ் என்​பது தெரிந்​தது. நாகேஸ்​வர​ராவ் தனி​யார் பள்ளி ஒன்​றில் பணி​யாற்றி வரு​கிறார்.

மேலும், இவர் தனது சொந்த ஊரில் கோயில் ஒன்று கட்டி வரு​வதும், கோயிலுக்​காக ஐம்​பொன் சிலை வாங்க சென்னை, பாரி​முனை, தேவ​ராஜ் முதலி தெரு​வில் உள்ள கடை ஒன்​றுக்கு பணத்​துடன் வந்​ததும் தெரிய வந்​தது. அந்த பணத்​துக்கு உரிய ஆவணங்​கள் இல்​லாத​தால், அதனை பறக்​கும் படை அதி​காரி​கள் பறி​முதல்​ செய்​தனர்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *