மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்…

மேஷம்

மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். அருகில் உள்ளவர்களின் ஆதரவு உண்டு. கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

ரிஷபம்

கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும் நாள். குடும்ப உறுப்பினர்கள் பாராட்டும் வகையிலான காரியமொன்று செய்வீர்கள். சகோதர வழியில் உதவி கிடைக்கும்.

மிதுனம்

நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைத்து மகிழும் நாள். பணத்தேவைகள் எளிதில் பூர்த்தியாகும். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும்.

கடகம்

வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். வழக்கமாகச் செய்யும் பணியை மாற்றியமைப்பீர்கள். உத்தியோக ரீதியாக பயணமொன்றை மேற்கொள்ள நேரிடும்.

சிம்மம்

வருமானம் அதிகரிக்கும் நாள். இருப்பினும் செலவு கூடும். தொழிலில் புதிய மாற்றங்களைச் செய்யும் எண்ணம் உருவாகும். உடல் நலத்தில் அக்கறை தேவை.

கன்னி

நூதனப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும் நாள். கல்யாண முயற்சி கைகூடும். தொலைதூரப் பயணங்கள் செல்லப் போட்ட திட்டம் நிறைவேறும்.

துலாம்

வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கும் நாள். அன்னிய தேசத்திலிருந்து உத்தியோகம் சம்பந்தமான அழைப்புகள் வந்து சேரும். விரோதங்கள் அகலும்.

விருச்சிகம்

மகிழ்ச்சியான தகவல் வந்து சேரும் நாள். ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள் முன்னோர் சொத்துகளில் முறையான பங்கீடு கிடைக்கும்.

தனுசு

யோசித்துச் செயல்படவேண்டிய நாள். எதிர்காலம் பற்றிய கவலை அதிகரிக்கும். கூட்டுத் தொழில் புரிவோர் பங்குதாரர்களிடம் கவனம் தேவை.

மகரம்

முன்கோபத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டிய நாள். வேலைகளை உடனடியாக முடிக்க இயலாது. கேட்ட இடத்தில் உதவி கிடைப்பது அரிது.

கும்பம்

யோகமான நாள். கடன்களை வசூலிக்க எடுத்த முயற்சி வெற்றி தரும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்பு வரலாம். பூர்வீக சொத்துப் பிரச்சனை அகலும்.

மீனம்

பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகும் நாள். புதிய வாய்ப்பு தேடி வரும். எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். உடல்நலம் சீராகி உற்சாகப்படுத்தும்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *