தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் திமுக கூட்ட​ணிக்கு ஆதரவு – தமிழர் தேசிய முன்​னணி நிறு​வனத் தலை​வர் பழ.நெடு​மாறன் தகவல்!!

தஞ்சாவூர்:
தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் திமுக கூட்ட​ணிக்கு ஆதரவு அளிப்​ப​தாக தமிழர் தேசிய முன்​னணி நிறு​வனத் தலை​வர் பழ.நெடு​மாறன் தெரி​வித்​தார்.

தஞ்​சாவூரில் தமிழர் தேசிய முன்​னணி​யின் மாநில செயற்​குழு கூட்​டம் நேற்று நடை​பெற்​றது. நிறு​வனத் தலை​வர் பழ.நெடு​மாறன் முன்​னிலை வகித்​தார்.

கூட்​டத்​தில் எடுக்​கப்​பட்ட முடிவு​கள் குறித்து பழ.நெடு​மாறன் பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறியது:

இக்​கூட்​டத்​தில் தமிழகத்​தில் நடை​பெறவுள்ள சட்​டப்​பேர​வைத் தேர்​தல் குறித்து விவா​திக்​கப்​பட்​டது.

இதில் தமிழ் மற்​றும் தமிழ்​நாட்​டின் நலனுக்கு எதி​ராக செயல்​படு​வது, இந்தி மற்​றும் சமஸ்​கிருத மொழியை தமிழகத்​தில் திணிப்​பது, இந்து மதவாதத்தை தூக்கி பிடிப்​பது போன்ற நடவடிக்​கை​களில் ஈடு​படும் பாஜக, தமிழகத்​தில் பல கட்​சிகளு​டன் கூட்​டணி அமைத்​துள்​ளது.

இந்த பேர​பா​யத்தை முறியடிக்க வேண்​டியது தமிழர்​களின் முதன்​மை​யான கடமை​யாகும்.

எனவே, பாஜக கூட்​ட​ணியை முறியடிக்​கும் வகை​யில், வரும் தேர்​தலில் திமுக கூட்​ட​ணிக்கு ஆதரவு அளிப்​பது என முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு பழ.நெடு​மாறன் தெரி​வித்​தார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *