நடிகை த்ரிஷா வீட்​டுக்கு தொடர்ந்து இ-மெ​யில் மூலம் வெடிகுண்டு மிரட்​டல்!!

சென்னை:
நடிகை த்ரிஷா வீட்​டுக்கு வெடிகுண்டு மிரட்​டல் விடுக்​கப்​பட்​டது குறித்து போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர்.

சென்னையில் பள்​ளி​கள், விமான நிலை​யங்​கள் மற்​றும் முக்​கிய பிரபலங்களின் வீடு​களுக்கு தொடர்ந்து இ-மெ​யில் மூலம் வெடிகுண்டு மிரட்​டல்​கள் விடுக்​கப்​படு​வது தொடர் கதை​யாகி உள்​ளது. இரு தினங்​களுக்கு முன்பு நடிகர்​கள் ரஜினி, தனுஷ் வீடு​களுக்கு குண்டு மிரட்​டல் விடுக்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில், டிஜிபி அலு​வலக முகவரிக்கு நேற்று வந்த இ-மெ​யிலில், நடிகை த்ரிஷா வீட்​டில் வெடிகுண்டு வைத்​துள்​ள​தாக​வும், அது சிறிது நேரத்​தில் வெடிக்​கும் எனவும் குறிப்​பிடப்​பட்​டிருந்​தது.

இதையடுத்து, தேனாம்​பேட்டை போலீ​ஸார் நேற்று வெடிகுண்​டு​ நிபுணர்​கள் மற்​றும் மோப்ப நாய்​களு​டன் சென்று ஆழ்வார்ப்​பேட்​டை​யில் உள்ள நடிகை த்ரிஷா வீடு முழு​வதும் சோதனை நடத்​தினர்.

இச்சோதனையில் எந்த பொருட்​களும் கண்​டெடுக்​கப்​பட​வில்​லை. இதையடுத்து, இது புரளி என தெரிய வந்தது. இதேபோல், சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த விவ​காரம் தொடர்​பாக, சைபர் க்ரைம் போலீ​ஸார் வழக்​குப் பதிந்​து வி​சா​ரிக்கின்​றனர்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *