ரஜினிகாந்தின் 173-வது படத்தில் இருந்து இயக்குநர் சிபி சக்ரவர்த்தி விலகியுள்ளதாகத் தகவல்!!

சென்னை:
ரஜினிகாந்தின் 173-வது படத்தில் இருந்து இயக்குநர் சிபி சக்ரவர்த்தி விலகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

‘கூலி’ படத்தை அடுத்து நெல்சன் திலீப்குமார் இயக்கும் ‘ஜெயிலர் -2’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

இதையடுத்து அவரது 173-வது திரைப்படத்தை சுந்தர்.சி இயக்குவதாகவும், நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

ஆனால், கதையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சுந்தர்.சி விலகினார். இதனால், சிவகார்த்திகேயன் நடித்த ‘டான்’ படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்தி, ரஜினிகாந்தை இயக்க இருந்தார். இதற்கான அறிவிப்பும் வெளியானது.

படத்துக்கான முதல்கட்ட பணிகள் நடைபெற்று வந்தபோதே படத்தின் அறிவிப்பு வீடியோவும் அதில் இடம்பெற்ற பின்னணி இசையும் பெரிய வரவேற்பைப் பெற்றது.

இதன் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் நடைபெற இருந்த நிலையில் இப்படத்தில் இருந்து சிபி சக்ரவர்த்தி மாற்றப்பட்டுள்ளதாகத் கூறப்படுகிறது.

அவர் மாற்றப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. அவருக்குப் பதிலாக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து ‘ரஜினி 173’ படத்தை இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

ரஜினி படத்துக்காக அடுத்தடுத்து 2 இயக்குநர்கள் மாற்றப்பட்டதால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

அசோக் செல்வன், விஜய் சேதுபதி நடித்து வெற்றிபெற்ற ‘ஓ மை கடவுளே’, பிரதீப் ரங்கநாதன் நடித்து ஹிட்டான ‘டிராகன்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார் அஷ்வத் மாரிமுத்து.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *