பாஜக, அதி​முக வேட்​பாளர்​களுக்கு ஆதர​வாக மயிலாப்பூர் மாட வீதி​களில் மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித்ஷா ‘ரோடு ஷோ’ மூலம் பிரச்​சா​ரம்!!

சென்னை: ​
பாஜக, அதி​முக வேட்​பாளர்​களுக்கு ஆதர​வாக மயிலாப்பூர் மாட வீதி​களில் மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித்ஷா ‘ரோடு ஷோ’ மூலம் பிரச்​சா​ரம் மேற்​கொண்​டார்.

அப்​போது, தொண்​டர்​கள் அவர் மீது மலர் தூவி உற்​சாக வரவேற்பு அளித்​தனர்.

தமிழகத்தில் ​சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்​கான பிரச்​சா​ரம் நாளை மாலை​யுடன் முடிவடைகிறது. இதையடுத்​து, அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள், வேட்​பாளர்​கள் தீவிர வாக்கு சேகரிப்​பில் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், நேற்று மதி​யம் ஈரோட்​டில் பிரச்​சா​ரத்தை முடித்​துக் கொண்​டு, சென்னை வந்த மத்​திய உள்​துறை அமித் ஷா, கிண்டி நட்​சத்​திர ஹோட்​டலில் பாஜக நிர்​வாகி​களு​டன் தேர்​தல் நில​வரம் குறித்து ஆலோ​சனை நடத்​தி​னார்.

பின்​னர், மாலை 6 மணிக்கு மயி​லாப்​பூர் கபாலீஸ்​வரர் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்​தார்.

அவருடன் மத்​திய அமைச்​சர் பியூஸ் கோயல், மயி​லாப்​பூர் தொகுதி பாஜக வேட்​பாளர் தமிழிசை சவுந்​தர​ராஜன், ஆயிரம் விளக்கு தொகுதி அதி​முக வேட்​பாளர் வளர்​ம​தி, வேளச்​சேரி தொகுதி அதி​முக வேட்​பாளர் அசோக் உள்​ளிட்​டோர் கலந்​து​கொண்​டனர்.

சுமார் 20 நிமிட தரிசனத்​துக்கு பிறகு வெளியே வந்த அமித்​ஷா, கிழக்கு மாட வீதி​யில் திறந்த வாக​னத்​தில் ‘ரோடு ஷோ’வை தொடங்​கி​னார்.

மாட வீதி​களின் இரு​புற​மும் கூடி​யிருந்த பாஜக, அதி​முக மற்​றும் கூட்​டணி கட்​சிகளின் தொண்​டர்​கள், உற்​சாக முழக்​கமிட்டு மலர்​களைத் தூவி அமித் ஷாவை வரவேற்​றனர்.

பொது​மக்​களைப் பார்த்​துக் கையசைத்​த​படி, தாமரை மற்​றும் இரட்டை இலை சின்​னங்​களுக்கு வாக்கு சேகரித்​தார்.

சித்​திரைக்​குளம், தெற்கு மாட வீதி, ராமகிருஷ்ணா மடம் சாலை, வெங்​கடேசா அக்​ரஹாரம் சாலை சந்​த​திப்பு வரை சுமார்​ ஒரு மணி நேரம்​ ரோடு ஷோ நடைபெற்​றது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *