தே​மு​தி​க​வுக்கு எவ்​வளவு தொகுதி வேண்​டு​மா​னாலும் கொடுங்​கள்; எங்​களுக்கு பிரச்​சினை இல்​லை….. தேமு​தி​க​வுக்கு அள்​ளிக் கொடுக்​கலாம் – திருமாவளவன் வாக்குமூலம்!!

சென்னை: ​
“தே​மு​தி​க​வுக்கு எவ்​வளவு தொகுதி வேண்​டு​மா​னாலும் கொடுங்​கள், எங்​களுக்கு பிரச்​சினை இல்​லை.

தேமு​தி​க​வுக்கு அள்​ளிக் கொடுக்​கலாம்” என்று முதல்​வர் ஸ்டா​லினிடம் சொன்​னேன் என திருமாவளவன் தெரி​வித்​துள்​ளார்.

திமுக அணி​யில் போட்​டி​யிடும் தேமு​தி​க​வுக்கு ஒரு ராஜ்யசபா சீட்​டும் பத்து தொகு​தி​களும் ஒதுக்​கப்​பட்​டன.

தேமு​தி​க​வுக்கு அதிக தொகு​தி​கள் கொடுக்​கும்​போது எங்​களுக்கு ஏன் குறைக்க வேண்​டும் என்று கம்​யூனிஸ்ட் கட்​சிகள் ஏற்​கெனவே திமுக​விடம் கேள்வி எழுப்​பின.

இந்​நிலை​யில், தேமு​தி​க​வுக்கு அதிக தொகு​தி​கள் கொடுக்​கு​மாறு ஸ்டா​லினிடம் தெரி​வித்​தேன் என்று விசிக தலை​வர் திரு​மாவளவன் தெரி​வித்​துள்​ளார்.

விருத்​தாசலம் தொகு​தி​யில் போட்​டி​யிடும் தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமல​தாவுக்கு திரு​மாவளவன் நேற்று வாக்கு சேகரித்​தார்​. அவர் பேசி​ய​தாவது:

முதல்​வர் ஸ்டா​லினிடம், ‘தே​மு​தி​க​வுக்கு எவ்​வளவு தொகுதி வேண்​டு​மா​னாலும் கொடுங்​கள், எங்​களுக்கு பிரச்​சினை இல்​லை.

தேமு​தி​கவை அதி​முக இழுத்​துச் செல்ல முயன்​றபோது, அதற்கு இணங்​காமல், நம் கூட்​ட​ணி​யில் இணைந்​திருக்​கிறார். எனவே அவருக்கு அள்​ளிக் கொடுக்​கலாம்’ என்று தெரி​வித்​தேன்​. இவ்​வாறு அவர்​ பேசினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *