டாஸ்மாக் கடைகள் 3 நாட்கள் தொடர் விடுமுறை!!

சென்னை:
தேர்​தலை​யொட்டி 3 நாட்​கள் தொடர் விடு​முறை விடப்​பட்​ட​தால் நேற்று முன்​தினம் டாஸ்​மாக் கடைகளில் ரூ.400 கோடிக்கு மது விற்​பனை நடை​பெற்​ற​தாக அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

தமிழகத்​தில் சட்​டப்​பேரவை தேர்​தல் வாக்​குப்​ப​திவு நாளை (ஏப்​.23) நடை​பெறுகிறது.

மே 4-ம் தேதி வாக்கு எண்​ணிக்கை நடை​பெற உள்​ளது. இந்​நிலை​யில் மாநிலம் முழு​வதும் டாஸ்​மாக் மதுக்​கடைகள் தேர்​தலுக்கு முன்​பாக ஏப்​.21 முதல் 23-ம் தேதி வரை 3 நாட்​களும், வாக்கு எண்​ணிக்கை நடை​பெறும் மே 4-ம் தேதி​யும் மூடப்​படும் என அறிவிக்​கப்​பட்​டது.

அதன்​படி, தொடர்ந்து 3 நாட்​கள் மதுக்​கடைகள் மூடப்​படு​வ​தால், நேற்று முன்​தினமே மதுப்​பிரியர்​கள் 3 நாட்​களுக்​கும் சேர்த்து மது​பாட்​டிகளை வாங்​கிச் சென்​றனர்.

இதனால் நேற்று முன்​தினம் மட்​டும் ரூ.400 கோடிக்கு மது விற்​பனை நடை​பெற்​றுள்​ள​தாகக் கூறப்​படு​கிறது.

மேலும் ஒருசில இடங்​களில் பெட்டி பெட்​டி​யாக வாங்​கிச் சென்​றனர். கடந்த நாடாளு​மன்​றத் தேர்​தலின்​போது ரூ.320 கோடிக்கு மது விற்​பனை செய்​யப்​பட்ட நிலை​யில் தற்​போது கூடு​தலாக ரூ.80 கோடிக்கு விற்​பனை நடை​பெற்​றுள்​ளது.

இதுகுறித்து டாஸ்​மாக் அதி​காரி​கள் கூறும்​போது, “தமிழகம் முழு​வதும் நாளொன்​றுக்கு சராசரி​யாக ரூ.150 கோடிக்கு மது விற்​பனை நடை​பெறும்.

3 நாள் மூடப்​படு​வ​தால் விற்​பனை அதி​கரித்​துள்​ளது வழக்​க​மானது​தான். ஒரு நபருக்கு அதி​கபட்​சம் 6 ஃபுல், குவாட்​டர் என்​றால் 24 பாட்​டில்​கள் அதாவது ஒரு பெட்டி மட்​டுமே விற்​கப்​படும்.

இந்த அளவை மீறி விற்​பனை செய்​யப்​பட்​டிருந்​தால் அவர்​கள் மீது நடவடிக்கை எடுக்​கப்​படும்.

மேலும் கள்​ளத்​தன​மாக மது விற்​பதை தடுக்க கண்​காணிப்பு பணி​களை மேற்​கொள்​ள​வும் அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது” என்​றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *