பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் வேலூர் விமான நிலையம் சென்றடைந்தார்.
நீலகிரியில் எல்.முருகனுக்கு ஆதரவாக பிரதமர் மோடி இன்று பரப்புரை 2 நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள பிரதமர் மோடி, வேலூரில் பாஜக கூட்டணி வேட்பாளரான புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவாக இன்று காலை பரப்புரை மேற்கொள்கிறார்.
இந்நிலையில் பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் வேலூர் விமான நிலையம் சென்றடைந்தார். வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் பங்கேற்கிறார்; கூட்டணி வேட்பாளர்கள் ஏ.சி.சண்முகம், சௌமியா அன்புமணி உள்ளிட்ட வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் பரப்புரை மேற்கொள்கிறார்.
பிற்பகல் 1:35 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி, நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளரும், மத்திய இணை அமைச்சருமான எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டவுள்ளார்.