தமிழகத்​தில் ஆட்சி மாற்​றம் ஏற்​படு​மா? என்ற கேள்விக்கு ‘மாற்​றம் வந்​து​கொண்​டே​தான் இருக்​கும்’ என்று கமல்​ஹாசன் குழப்​ப​மான பதில்!!

சென்னை:
தமிழகத்​தில் ஆட்சி மாற்​றம் ஏற்​படு​மா? என்ற கேள்விக்கு ‘மாற்​றம் வந்​து​கொண்​டே​தான் இருக்​கும்’ என்று கமல்​ஹாசன் குழப்​ப​மான பதில் அளித்​தார்.

மக்​கள் நீதி மய்​யம் தலை​வர் கமல்​ஹாசன் தேனாம்​பேட்டை எல்​டாம்ஸ் சாலை – திரு​வள்​ளுவர் சாலை சந்​திப்​பில் உள்ள மாநக​ராட்சி உயர்​நிலைப்​ பள்ளி வாக்​குச்​சாவடி​யில் அவரது மகள் ஸ்ருதி ஹாசனுடன் வரிசை​யில் நின்று வாக்​களித்​தார்.

பின்​னர், செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறும்​போது, “எனது ஜனநாயகக் கடமையை ஆற்​றி​யுள்​ளேன்.

மற்ற வாக்​காளர்​களும் வாக்​களித்து தங்​கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி வரு​கிறார்​கள்” என்​றார்.

தொடர்ந்து அவரிடம், “தமிழகத்​தில் ஆட்சி மாற்​றம் வரு​மா?” என கேள்வி எழுப்​பிய​போது, “மாற்​றம் வந்​து​கொண்​டே​தான் இருக்​கும்” என்று குழப்​ப​மான பதிலளித்​தார்.

தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன், ஆழ்​வார்​பேட்டை மாநக​ராட்சி மேல்​நிலைப்​பள்ளி வாக்​குச்​சாவடி​யில் வாக்​களித்த பிறகு செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, “தற்​போதைய திமுக ஆட்​சி​யில் மக்​கள் அதிருப்​தி​யில் உள்​ளனர்.

எனவே, அவர்​கள் மாற்​றத்தை விரும்பி வாக்​களிப்​பார்​கள். தேசிய ஜனநாயகக் கூட்​டணி சிறப்​பான ஆட்சி அமைக்​கும் என நம்​பிக்கை இருக்​கிறது” என்​றார்.

அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடிவி தினகரன் அடை​யாறு தாமோத​ரபுரம் அரசு நடுநிலைப்​பள்ளி வாக்​குச்​சாவடி​யில் வாக்​களித்​தார்.

பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறும்​போது, “ஆளுங்​கட்​சி​யான திமுக தேர்​தலில் தோல்வி அடைந்​து​விடு​வோம் என்ற அச்​சத்​தில் உள்​ளது. அதனால், அதி​முக கூட்​டணி மீது பல்​வேறு அவதூறுகளைப் பரப்பி வரு​கிறது.

தமிழகத்​தின் வளர்ச்​சி​யை​யும், சட்​டம் ஒழுங்​கை​யும் கருத்​தில்​கொண்டு புதிய வாக்​காளர்​கள் வாக்​களிக்க வேண்​டும். தமிழகத்​தில் அமை​தி​யான சூழல் மற்​றும் வளர்ச்சி ஏற்பட அதி​முக தலை​மை​யில் கூட்​ட​ணி ஆட்​சி அமைய வேண்டும்” என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *