அதிமுக – திமுக கூட்டணி முயற்சி நடந்திருக்க வாய்ப்பில்லை என்பதே எனது தனிப்பட்ட கருத்து – செல்வப்பெருந்தகை!!

சென்னை:
“அதிமுக – திமுக கூட்டணி குறித்து பத்திரிகைகளில் நான் சில செய்திகளைப் பார்த்தேன்.

அதுபோன்ற முயற்சி நடந்திருக்குமா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

அதுபோல நடந்திருக்க வாய்ப்பில்லை என்பதே எனது தனிப்பட்ட கருத்து” என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் அயோத்திதாச பண்டிதர் மணிமண்டபத்தில் மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, “2023-ல் முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவையில் நாங்கள் வைத்த கோரிக்கையை ஏற்று, இங்கே அயோத்திதாசர் மணிமண்டபத்தை நிறுவினார். அவருக்கு நாங்கள் எப்போதும் கடமைப்பட்டுள்ளோம்.

இந்த மணிமண்டபத்தை பேணிக் காக்க வேண்டும் என்பதே புதிய அரசுக்கான எங்களின் கோரிக்கை.

தவெக அரசில் எத்தனை காங்கிரஸார் அமைச்சராக பதவியேற் பார்கள் என விரைவில் அறிவிப்பு வரும்.

அதிமுகவிலிருந்து சிலர் தவெக அரசுக்கு ஆதரவு அளித்துள்ளனர். ஒருவேளை அதிமுகவினருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டால், அதுபற்றி கட்சிக்குள் ஆலோசிப்போம். அதுகுறித்து பரிசீலனை செய்வோம்.

அதிமுக -திமுக கூட்டணி குறித்து பத்திரிகைகளில் தான் சில செய்திகளைப் பார்த்தேன்.

அதுபோன்ற முயற்சி நடந்திருக்குமா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

அதுபோல நடந்திருக்க வாய்ப்பில்லை என்பதே எனது தனிப்பட்ட கருத்து.” என்று தெரிவித்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *