சட்டசபை தேர்தலில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு சட்டசபை தேர்தலில் திமுகவுக்கான வெற்றி வாய்ப்பு சூப்பராக உள்ளது !! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்……

மதுரை;
தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் வாக்கு எண்ணிக்கைக்கு 10 நாட்கள் உள்ளன.


இந்த தேர்தலில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் வேட்பாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இதைத்தொடர்ந்து அவர் கொடைக்கானலில் 5 நாட்கள் ஓய்வெடுக்க திட்டமிட்டுள்ளார்.

இதற்காக இன்று காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் முதலமைச்சர் மதுரை புறப்பட்டு சென்றார்.

இந்நிலையில், மதுரை விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், சட்டசபை தேர்தலில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.


அதற்கு பதில் அளித்த அவர், சட்டசபை தேர்தலில் திமுகவுக்கான வெற்றி வாய்ப்பு சூப்பராக உள்ளது என்று கூறினார்.

மதுரையில் இருந்து அவர் கார் மூலம் மாலை கொடைக்கானலுக்கு செல்கிறார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *