ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 9-ந்தேதி ஐக்கிய அரபு எமிரேட்சில் தொடங்குகிறது. இந்தப் போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
இந்திய அணியில் இடம் பெற்றுள்ள டெஸ்ட் கேப்டன் சுப்மன்கில், வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஆகியோருக்கு உடல் தகுதிக்கான சோதனை நடத்தப்பட்டது.
பெங்களூரில் உள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் சிறப்பு மையத்தில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் இருவரும் தேர்ச்சி பெற்றனர். இதே போல ஒரு நாள் போட்டிக்கான கேப்டன் ரோகித்சர்மாவும் உடல் தகுதி சோதனையில் தேர்ச்சி பெற்றார்.
சுப்மன்கில் 20 ஓவர் அணிக்கு துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். காய்ச்சல் காரணமாக துலிப் டிராபி போட்டியில் இருந்து அவர் விலகினார். இதனால் அவருக்கு உடல் தகுதி சோதனை கட்டாயமாக்கப்பட்டது.