தாமஸ் கோப்பை பாட்மிண்டன் ; கால் இறுதிக்கு முன்னேறிய இந்தியா

ஹார்சென்ஸ்:
டென்​மார்க்​கின் ஹார்​சென்ஸ் நகரில் தாமஸ் கோப்பைக்​கான பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வரு​கிறது.

இதில் ‘ஏ’ பிரி​வில் இடம் பெற்றிருந்த இந்​திய ஆடவர் அணி நேற்று நடை​பெற்ற லீக் ஆட்​டத்​தில் ஆஸ்​திரேலி​யாவை எதிர்த்து விளை​யாடியது.

இதில் இந்​தியா 5-0 என்ற கணக்​கில் முழு​மை​யாக வெற்றி பெற்று கால் இறுதி சுற்​றுக்கு முன்​னேறியது.

ஒற்​றையர் பிரிவு ஆட்​டங்​களில் இந்​தி​யா​வின் லக் ஷயா சென் 21-14, 21-16 என்ற செட் கணக்​கில் எஃப்​ரைம் ஸ்டீபனை​யும், ஆயுஷ் ஷெட்டி 21-8, 21-6 என்ற செட் கணக்கில் ஸ்ரே தண்​டை​யும் தோற்​கடித்​தனர்.

ஹெச்.எஸ்.பிரனாய் 21-11, 21-17 என்ற செட் கணக்​கில் ரிஷி ஹோன்டா பூப​தியை வீழ்த்​தி​னார்.

இரட்​டையர் பிரி​வில் இந்​தி​யா​வின் சாட்விக் சாய்​ராஜ் ராங்கி ரெட்​டி, ஷிராக் ஷெட்டி ஜோடி 21-14, 21-16 என்ற செட் கணக்​கில் ரிஸ்கி ஹிடா​யத், ஜாக் யூ ஜோடியை வீழ்த்தியது. அதேவேளை​யில் ஹரி​கரன் அம்​சகருணன், எம்​.ஆர்​.அர்​ஜூன் ஜோடி 21-12, 21-10 என்ற செட் கணக்​கில் ஆண்​டிகா ராமடியன்​ஸ்​யா, எப்​ரைம் ஸ்டீபன் சாம் ஜோடியை வென்​றது. இந்​திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்​தில் நாளை (29-ம் தேதி) சீனா​வுடன்​ மோதுகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *