வரும் 2030-ம் ஆண்​டுக்குள் இந்​திய பொருளா​தா​ரத்தை இரண்டு மடங்​காக அதி​கரிக்க இலக்கு; மத்​திய அரசின் தலைமை பொருளா​தார ஆலோ​சகர் வி.அனந்த நாகேஸ்​வரன் தகவல்!!

சென்னை:
வரும் 2030-ம் ஆண்​டுக்குள் இந்​திய பொருளா​தா​ரத்தை இரண்டு மடங்​காக அதி​கரிக்க இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ள​தாக, மத்​திய அரசின் தலைமை பொருளா​தார ஆலோ​சகர் வி.அனந்த நாகேஸ்​வரன் தெரி​வித்​தார்.

மத்​திய அரசின் முன்​னணி உயர் தொழில்​நுட்ப கல்வி நிறு​வனங்​களில் ஒன்​றான சென்னை ஐஐடி​யின் 67-வது ஆண்டு நிறுவன விழா, ஐஐடி வளாகத்​தில் உள்ள மாணவர் செயல்​பாட்டு மைய கலை​யரங்​கில் நேற்று நடை​பெற்​றது.

இதில், மத்​திய அரசின் தலைமை பொருளா​தார ஆலோ​சகர் அனந்த நாகேஸ்​வரன் சிறப்பு விருந்​திரன​ராக கலந்​துக் கொண்டு பேசி​ய​தாவது:

இந்தியாவில் தகவல் தொழில்​நுட்​பத்​துறை ஆண்​டுக்கு 50 லட்​சம் முதல் 60 லட்​சம் வரையி​லான வேலை​வாய்ப்​பு​களை உரு​வாக்கி வரு​கிறது.

ஆனால், இந்த எண்​ணிக்கை 80 லட்​சம் அளவுக்கு உயர வேண்​டும். நாட்​டின் ஒட்​டுமொத்த வேலை​வாய்ப்பு சவாலுக்கு தகவல் தொழில்​நுட்​பத்​துறை மட்​டுமே தீர்​வாக இருக்க முடி​யாது.

எனவே, உற்​பத்​தித் துறை​யிலும் திறன் மேம்​பாட்​டிலும் அதிக கவனம் செலுத்த வேண்​டும்.

நீடித்த பொருளா​தார வளர்ச்​சிக்கு திறன் மேம்​பாடும், உற்​பத்தி துறை வளர்ச்​சி​யும் மிக​வும் அவசி​யம். இதை, தென்​கொரி​யா, சுவிட்​சர்​லாந்​து, ஜெர்​மனி, சுவீடன் உள்​ளிட்ட நாடு​கள் நிரூபித்​துள்​ளன.

தற்​போது வளர்ந்து வரும் தொழில்​நுட்​ப​மான செயற்கை நுண்​ணறி​வால் (ஏஐ) வேலை​வாய்ப்பு பறிக்​கப்​பட்​டு​விடுமோ என்ற அச்​சம் அனை​வரின் மனதி​லும் எழுந்​துள்​ளது.

இந்​திய வேலை​வாய்ப்​புச்​சூழலை பொருத்​தவரை​யில், ஏஐ தொழில்​நுட்​பம் என்​பது வரப்​பிர​சாதம் தானே தவிர, அது ஓர் அச்​சுறுத்​தலாக இருக்​காது. ஏஐ வளர்ச்​சி​யால் புதிய வேலை​வாய்ப்​பு​கள் உரு​வாகும்.

அந்த வேலைகளுக்கு தேவை​யான தொழில்​நுட்​பத் திறன்​களை கொண்​ட​வர்​களாக நம்மை உரு​வாக்​கிக் கொள்ள வேண்​டும். அதற்​கேற்ப கல்வி நிறு​வனங்​களும் தொழில்​ நிறு​வனங்​களும் இணைந்து செயல்பட வேண்​டும்.

மேற்கு ஆசி​யா​வில் ஏற்​பட்​டுள்ள போர் சூழலில் வரும் காலத்​தில் எரிசக்தி பாது​காப்​பிலும், திறமை​யான பொது போக்​கு​வரத்​தி​லும் இந்​தியா கவனம் செலுத்த வேண்​டும். இதற்கு ஒருங்​கிணைந்த செயல்​பாடு​கள் அவசி​யம்.

ஆராய்ச்சி மற்​றும் மேம்​பாட்​டுக்கு அமெரிக்​கா, சீனா, தென்​கொரியா உள்​ளிட்ட நாடு​கள் அதிக நிதி ஒதுக்​கீடு செய்​கின்​றன.

நாட்​டின் ஒட்​டுமொத்த உள்​நாட்டு உற்​பத்​தி​யில் (ஜிடிபி) அமெரிக்கா 3.46 சதவீத​மும், சீனா 2.43 சதவீத​மும், தென்​கொரியா 4.93 சதவீத​மும் நிதி ஒதுக்​கு​கின்​றன.

ஆனால், இந்​தியா தனது ஜிடிபி​யில் 0.65 சதவீதம் மட்​டுமே ஆராய்ச்சி மற்​றும் மேம்​பாட்​டுக்கு நிதி ஒதுக்​கு​கிறது.

இது அதிகரிக்​கப்பட வேண்​டும். சீனா போட்டி உலகளா​விய வர்த்​தகத்​தில் சீனா நமக்கு மிகப்​பெரிய போட்​டி​யாக இருந்து வரு​கிறது.

நாம் விவ​சாய உற்​பத்​தி, எரிசக்தி பாது​காப்​பு, செயற்கை நுண்​ணறிவு உள்​ளிட்ட துறை​களில் அதிக கவனம் செலுத்த வேண்​டியது அவசி​யம். தற்​போது இந்​திய பொருளா​தா​ரம் 3.91 டிரில்​லியன் அமெரிக்க டாலர் என்ற அளவில் உள்​ளது.

இதை 2030-ம் ஆண்​டுக்​குள் இரண்டு மடங்​காக அதி​கரிக்க மத்​திய அரசு இலக்கு நிர்​ண​யித்​துள்​ளது.

இவ்​வாறு அவர் பேசி​னார். தொடர்ந்​து, பல்​வேறு துறை​களில் சிறந்து விளங்​கும் ஐஐடி முன்​னாள் மாணவர்​களுக்கு சாதனை​யாளர் விருது மற்​றும் நிறுவன ஆராய்ச்சி மேம்​பாட்டு விருதை​யும் அவர் வழங்​கி​னார்.

முன்​ன​தாக, ஐஐடி இயக்​குநர் வீ.​காமகோடி தலை​மை​யுரை ஆற்றி பேசி​னார். விழா​வில், ஐஐடி டீன்​கள், பேராசிரியர்​கள், மாணவ-​மாணவி​கள், பெற்றோர் பங்​கேற்​றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *