சென்னை:
இணை ஆணையர் உட்பட சென்னையில் ஒரே நாளில் 40 போலீஸார் பணி ஓய்வு பெற்றனர்.
சென்னை காவல் துறையில்,தலைமையிடத்து இணை ஆணையராக எஸ்.மகேஸ்வரன் பணியாற்றி வந்தார்.
இவர் மற்றும் உதவி ஆணையர் ராஜா, காவல் ஆய்வாளர் ஹரிதாஸ் மற்றும் 16 காவல் உதவி ஆய்வாளர்கள், 20 சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் 1 பெண் தலைமைக் காவலர் என மொத்தம் 40 போலீஸார் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றனர்.
இவர்களுக்கான பணி நிறை வுபாராட்டு விழா, வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
காவல் ஆணையர் அபின் தினேஷ் மோடக், பணி ஓய்வு பெற்ற 40 பேருக்கும் பொன்னாடை போர்த்தி, பாராட்டி சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
பணி ஓய்வு பெற்ற போலீஸார், 22 ஆண்டுகள் முதல் 41 ஆண்டுகள் வரை சிறப்பாக பணிபுரிந்துள்ளனர்.
அவர்களால் தமிழக காவல்துறைக்கும், சென்னை பெருநகர காவல்துறைக்கும் பெருமை கிடைத்துள்ளது.
ஓய்வு பெறுகின்ற காவல் துறையினர் தங்களது உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என காவல் ஆணையர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், காவல் கூடுதல் ஆணையர் (தலைமையிடம்) ஜோஷி நிர்மல் குமார், துணை ஆணையர்கள் சுப்பு லட்சுமி, கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.