முன்​னாள் அமைச்​சர் எஸ்​. பி.வேலுமணி, சி.​வி.சண்​முகம் ஆகியோர் ‘அதி​முக​வின் துரோகி​கள்’ என குற்​றம்​சாட்டி சேலத்​தில் அதி​முக நிர்​வாகி​கள், தொண்​டர்​கள் கோஷங்​கள்!!

சேலம்: ​
முன்​னாள் அமைச்​சர் எஸ்​.பி.வேலுமணி, சி.​வி.சண்​முகம் ஆகியோர் ‘அதி​முக​வின் துரோகி​கள்’ என குற்​றம்​சாட்டி சேலத்​தில் அதி​முக நிர்​வாகி​கள், தொண்​டர்​கள் கோஷங்​கள் எழுப்​பினர்.

இதனிடையே, அதி​முக பொதுச்​செய​லா​ளர் பதவி​யில் இருந்து பழனி​சாமி பதவி விலக வலி​யுறுத்தி ஒட்​டப்​பட்​டிருந்த போஸ்டரால் பரபரப்பு ஏற்​பட்​டது.

தமிழக சட்​டப்​பேர​வை​யில் பெரும்​பான்​மையை நிரூபிக்க, தவெக அரசு கொண்டு வந்த தீர்​மானத்​தை, பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி தலை​மை​யில் அதி​முக​வினர் எதிர்த்து வாக்​களித்​தனர்.

ஆனால், முன்​னாள் அமைச்​சர்​கள் எஸ்​.பி.வேலுமணி, சி.​வி.சண்​முகம் உள்​ளிட்​டோர் தலை​மை​யில் அதி​முக எம்​எல்​ஏ-க்​கள் பிரிந்​து, தீர்​மானத்தை ஆதரித்து வாக்​களித்​தனர். இதனால், அதி​முக​வில் பிளவு ஏற்​படும் நிலை உள்​ளது.

இந்​தச்​சூழலில், அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி​யின் சொந்த மாவட்​ட​மான சேலத்​தில், அதி​முக மாநகர் மாவட்ட அவைத்​தலை​வர் பன்​னீர்​செல்​வம், மாவட்​டச் செய​லா​ளர் பாலு, சேலம் தெற்கு தொகு​தி​யில் போட்​டி​யிட்ட வினோத் உள்பட அதி​முக​வினர் 100-க்​கும் மேற்​பட்​டோர் திரண்​டு, சேலம் அண்ணா பூங்கா வளாகத்​தில் உள்ள

எம்​ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை​யணிவித்​தனர் மேலும், அதி​முக​வுக்கு துரோகம் செய்த முன்​னாள் அமைச்​சர்​கள் எஸ்​. பி.வேலுமணி, சி.​வி.சண்​முகம், விஜய​பாஸ்​கர், தங்​கமணி உள்​ளிட்​டோரை துரோகி​கள் என குற்​றம்​சாட்​டியதுடன், அவர்​களை அதி​முக​வில் இருந்து நீக்க வேண்​டும் என்றும் கோஷமிட்​டனர்.

இதற்​கிடையே, சேலத்​தில் அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி​யின் இல்​லத்​துக்கு செல்​லக்​கூடிய சாலை​யில், ‘பொதுச்​செய​லா​ளர் பதவி​யில் இருந்து பழனி​சாமி விலக வேண்​டும்.

எம்​ஜிஆர், ஜெயலலிதா ஆகியோ​ரால் பாது​காக்​கப்​பட்ட அதி​முகவை, திமுக​விடம் அடகுவைப்​ப​தற்கு முயற்சி செய்த பழனி​சாமி, பொதுச்​செய​லா​ளர் பதவி​யில் இருந்து விலக வேண்​டும்’ என போஸ்டர் ஒட்​டப்​பட்​டிருந்​தது.

பல்வேறு மாவட்டங்களில்…

இதேபோல் நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோருக்கு எதிராகவும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

ஆர்ப்பாட்டங்களிலும் தொண்டர்கள் ஈடுபட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே மோதல் போக்கு வலுத்து வருவது அதிமுக தொண்டர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *