தொடர் சரிவில் தங்கம் விலை!!

சென்னை,
தங்கம் விலை கடந்த மாதம் (அக்டோபர்) 17-ந்தேதி ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 200-க்கும், ஒரு சவரன் ரூ.97 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதுதான் இதுவரை இல்லாத தங்கம் விலை உச்சமாக பார்க்கப்பட்டது. அதன் பின்னர் விலை அதிகரிக்கும் என சொல்லப்பட்ட நிலையில், விலை குறையத் தொடங்கியது.

ஒரு கட்டத்தில் அதாவது, கடந்த மாதம் 28-ந்தேதி ஒரு சவரன் ரூ.89 ஆயிரத்துக்கு கீழ் வந்தது.அதனையடுத்து தங்கம் விலையில் ஏற்ற-இறக்கம் நிலையும் நீடித்து வந்ததை பார்க்க முடிந்தது.

இந்த நிலையில், கடந்த 10-ந் தேதியில் இருந்து தொடர்ந்து ஏறுமுகத்தை கண்டு வந்தது. நேற்று முன்தினம் மட்டும் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,400 அதிகரித்திருந்தது. இதன் மூலம் மீண்டும் புதிய உச்சத்தை நோக்கி தங்கம் விலை பயணிக்க தொடங்கிவிட்டதோ? என்று பேசும் அளவுக்கு விலை உயர்வு இருந்தது.

இந்த நிலையில் நேற்று விலை குறைந்து காணப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 900-க்கும், ஒரு சவரன் ரூ.95 ஆயிரத்து 200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

நேற்று காலையில் கிராமுக்கு ரூ.60-ம், சவரனுக்கு ரூ.480-ம், பிற்பகலில் கிராமுக்கு ரூ.100-ம், சவரனுக்கு ரூ.800-ம் என மொத்தம் ஒரே நாளில் கிராமுக்கு ரூ.160-ம், பவுனுக்கு ரூ.1,280-ம் குறைந்து இருந்தது.


தங்கத்தை போல, வெள்ளி விலையும் நேற்று குறைந்திருந்தது. கிராமுக்கு ரூ.3-ம், கிலோவுக்கு ரூ.3 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.180-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது.

தங்கம் விலை
இந்நிலையில் இன்றும் தங்கம் விலை சரிந்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.190 குறைந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 550-க்கும், சவரனுக்கு ரூ.1,520 குறைந்து, ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்து 400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை
வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. இதன்படி கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ. 5 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.175-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-

15.11.2025 ஒரு சவரன் ரூ.92,400 (இன்று)

14.11.2025 ஒரு சவரன் ரூ.93,920 (நேற்று)

13.11.2025 ஒரு சவரன் ரூ.95,200

12.11.2025 ஒரு சவரன் ரூ.92,800

11.11.2025 ஒரு சவரன் ரூ.93,600

10.11.2025 ஒரு சவரன் ரூ.91,840

09.11.2025 ஒரு சவரன் ரூ.90,400

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *