மும்பை:
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை டி.வி.யில் பார்ப்போர் எண்ணிக்கை விரைவில் 50 கோடியை எட்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 29-ம் தேதி முதல் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஒரு போட்டியை டி.வி.யில் பார்ப்போரின் எண்ணிக்கை 50 கோடியை விரைவில் எட்ட உள்ளதாக ஜியோஸ்டார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
ஐபிஎல் போட்டிகளை டிஜிட்டல் தளத்தில் பார்ப்போரின் எண்ணிக்கை 7 சதவீதம் உயர்ந்துள்ளது.
அதேபோல் டி.வி.களில் பார்ப்போரின் எண்ணிக்கை விரைவில் 50 கோடியை எட்டவுள்ளது. குறிப்பாக ஐபிஎல் போட்டிகளை ஒட்டுமொத்த டிஜிட்டல் தளத்தில் பார்ப்போரின் எண்ணிக்கை 15 சதவீதம் கூடியுள்ளது.
இந்தத் தரவுகள் 51 போட்டிகளை டி.வி.யில் பார்த்த ரசிகர்கள், 57 போட்டிகளை டிஜிட்டல் தளங்களில் பார்த்த ரசிகர்களின் எண்ணிக்கையைக் கொண்டு தரப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.