ஐபிஎல் கிரிக்கெட் ; டி.​வி.களில் பார்ப்​போரின் எண்ணிக்கை விரை​வில் 50 கோடியை எட்​ட​வுள்​ளது!!

மும்பை:
ஐபிஎல் கிரிக்​கெட் போட்​டிகளை டி.​வி.​யில் பார்ப்​போர் எண்​ணிக்கை விரை​வில் 50 கோடியை எட்​டும் என அறிவிக்கப்பட்டுள்​ளது.

கடந்த மார்ச் 29-ம் தேதி முதல் ஐபிஎல் கிரிக்​கெட் தொடர் நாடு முழு​வதும் பல்​வேறு நகரங்​களில் நடைபெற்று வரு​கிறது.

இந்​நிலை​யில் ஒரு போட்​டியை டி.​வி.​யில் பார்ப்போரின் எண்​ணிக்கை 50 கோடியை விரை​வில் எட்ட உள்ளதாக ஜியோஸ்​டார் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் தெரிவிக்கப்பட்டுள்​ளது.

அதில் மேலும் கூறப்​பட்​டுள்​ள​தாவது:

ஐபிஎல் போட்​டிகளை டிஜிட்டல் தளத்​தில் பார்ப்​போரின் எண்​ணிக்கை 7 சதவீதம் உயர்ந்துள்​ளது.

அதே​போல் டி.​வி.களில் பார்ப்​போரின் எண்ணிக்கை விரை​வில் 50 கோடியை எட்​ட​வுள்​ளது. குறிப்​பாக ஐபிஎல் போட்​டிகளை ஒட்​டுமொத்த டிஜிட்​டல் தளத்​தில் பார்ப்​போரின் எண்​ணிக்கை 15 சதவீதம் கூடி​யுள்​ளது.

இந்​தத் தரவு​கள் 51 போட்​டிகளை டி.​வி.​யில் பார்த்த ரசிகர்​கள், 57 போட்​டிகளை டிஜிட்​டல் தளங்​களில் பார்த்த ரசிகர்​களின் எண்​ணிக்​கை​யைக் கொண்டு தரப்​பட்​டுள்​ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *