பொதுமக்களை அதிகாரிகள் நிற்க வைக்கக் கூடாது எனப் பதிவுத்துறை அதிரடி உத்தரவு!!

சென்னை:
தமிழ்நாடு முழுவதும் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களை அதிகாரிகள் நிற்க வைக்கக் கூடாது எனப் பதிவுத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.


ஒவ்வொரு அதிகாரியின் மேஜைக்கு முன்னாலும் பொதுமக்களுக் காகக் குறைந்தபட்சம் 2 நாற்காலிகள் கண்டிப்பாகப் போடப்பட்டிருக்க வேண்டும்.

பொதுமக்களை அமரவைத்து மட்டுமே அதிகாரிகள் பேச வேண்டும். எக்காரணத்தை கொண்டும் மக்களை நிற்கவைத்து அதிகாரிகள் பதிலளிக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


இந்த புதிய விதிமுறையை மீறி பொதுமக்களை நிற்க வைக்கும் அதிகாரிகள் மீது சிசிடிவி கண்காணிப்பு மூலம் கடுமையான துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் பல அலுவலகங்களில் உத்தரவு பின்பற்றப்படவில்லை என புகார் வந்ததால் பதிவுத்துறை தலைவர் சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தி உள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *