ஆத்தூரில் இரவில் மின்சாரம் தாக்கியதில் மாடி வீட்டில் குடியிருந்த கணவன், மனைவி மற்றும் இளைஞர் ஒருவர் நிகழ்விடத்திலேயே உயிரிழப்பு!!

திண்டுக்கல்:
ஆத்தூரில் இரவில் மின்சாரம் தாக்கியதில் மாடி வீட்டில் குடியிருந்த கணவன், மனைவி மற்றும் இளைஞர் ஒருவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் அக்ரஹாரத்தை சேர்ந்தவர் கொத்தனார் கருப்பையா(41). இவரது மனைவி சுதா(37). இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் அப்பகுதியில் உள்ள மாடி வீட்டில் குடியிருந்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று இரவு ஆத்தூர் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. பலத்த காற்று வீசியதால் மின்சார வயர் அறுந்து மாடியில் விழுந்துள்ளது.

மின்சார வயறு அறுந்து கிடந்ததை அறியாத கருப்பையா அதை மிதித்ததால் மின்சாரம் தாக்கியது.

இவரின் அலறல் சத்தம் கேட்டு வீட்டிற்குள் இருந்து வந்த மனைவி சுதா, கணவரை காப்பாற்றமுயலும் போது அவர்மீதும் மின்சாரம் தாக்கியது.

மாடிவீட்டில் அலறல் சத்தம் கேட்டு வீட்டு உரிமையாளரின் மகன் கல்லூரி மாணவன் சுப்பிரமணிய சிவா(18), மாடியில் சென்று இருவரையும் காப்பாற்ற முயன்றுள்ளார்.

அப்போது மாணவன் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இந்த நிகழ்வில் மூன்று பேரும் மின்சாரம் தாக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஊர்மக்கள் மூவரையும் மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் மூவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

செம்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *