நாகப்பட்டினம்
தமிழகத்தில் ஏழை மூத்த குடிமக்கள், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுக்கும் எளிதாக சென்று தரிசனம் செய்யும் வகையில், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை இலவச ஆன்மிக பயணத் திட்டத்தை செயல்படுத்துகிறது.
அவ்வகையில் நாகை மண்டலத்தைச் சேர்ந்த பயனாளிகளுக்கான இலவச ஆன்மிக பயணம் இன்று தொடங்கியது.
இந்து சமய அறநிலைத்துறை நாகை மண்டல இணை ஆணையர் குமரேசன் வழிகாட்டுதலின் படி, உதவி ஆணையர் ராஜா இளம்பெரும் வழுதி கொடியசைத்து பயணத்தை தொடங்கி வைத்தார்.
நாகை, திருவாரூர் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 100 பயனாளிகள் தமிழ்நாடு சுற்றுலாத்துறை பேருந்தில் பயணம் செய்கின்றனர். நாகையிலிருந்து புறப்படும் இந்த பேருந்து சுவாமி மலை, திருத்தணி, பழனி, திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை, திருச்செந்தூர் என அறுபடை வீடு கோவில்களுக்கு சென்று திரும்பும்.