ரூ.180 கோடி போதைப் பொருள் பறி​முதல் செய்​யப்​பட்ட விவ​காரம் தொடர்​பாக சென்​னை​யில் 3 இடங்​களில் அமலாக்​கத் துறை​யினர் திடீர் சோதனை !!

சென்னை:
ரூ.180 கோடி போதைப் பொருள் பறி​முதல் செய்​யப்​பட்ட விவ​காரம் தொடர்​பாக சென்​னை​யில் 3 இடங்​களில் அமலாக்​கத் துறை​யினர் நேற்று திடீர் சோதனை நடத்​தினர்.

சென்னை எழும்​பூரில் இருந்து செங்​கோட்​டைக்கு கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி பொதிகை ரயில் சென்று கொண்​டிருந்​தது.

அந்த ரயில் மதுரை சந்​திப்பு ரயில் நிலை​யத்​தில் நிற்​கும்​போது மத்​திய வரு​வாய் புல​னாய்​வுப் பிரிவு அதி​காரி​கள் அதிரடி​யாக சோதனை நடத்​தினர்.

அப்​போது அந்த ரயி​லிலிருந்து ரூ.180 கோடி மதிப்​புள்ள மெத்​தம்​பெட்​டமைன் போதைப் பொருளை பறி​முதல் செய்​தனர்.

இது தொடர்​பாக சென்னை கொடுங்​கையூர் அபி​ராமி அவென்யூ பகு​தி​யைச் சேர்ந்த பிலோமன் பிர​காஷ், வியாசர்​பாடி சாஸ்​திரி நகர் 11-வது தெரு​வைச் சேர்ந்த யேசு​ராஜ் (39) உட்பட 3 பேர் கைது செய்​யப்​பட்​டனர்.

இதுகுறித்து மத்​திய வரு​வாய் புல​னாய்​வுப் பிரிவு அதி​காரி​கள் வழக்​குப் பதிவு செய்​து, விசா​ரணை மேற்​கொண்​டனர்.

கடத்​தல் கும்​பலின் தலை​வ​ராக செயல்​பட்ட யேசு​ராஜ், இக்​கடத்​தலில் நீண்ட கால​மாக ஈடு​பட்​டிருப்​பதும், போதைப் பொருள் கடத்​தல் மூலம் சட்​ட​விரோத​மாக ஈட்​டிய பணத்​தில் அசை​யும் மற்​றும் அசையா சொத்​துகளை வாங்​கி​யிருப்​பதும், அதில் பல சொத்​துகளை பினாமிகள் பெயரில் வாங்​கி​யிருப்​பதும் தெரிய​வந்​தது.

இதையடுத்து இவ்​வழக்​கில் சட்​ட​விரோத பணப்​பரி​மாற்​றம் நிகழ்ந்​திருப்​ப​தற்​கான முகாந்​திரம் இருப்​ப​தாகக் கருதி மத்​திய வரு​வாய் புல​னாய்​வுப் பிரிவு, அமலாக்​கத் துறை விசா​ரணை செய்ய அண்​மை​யில் பரிந்​துரை செய்​தது.

அந்த பரிந்​துரை​யின் அடிப்​படை​யில் அமலாக்​கத் துறை​யினர், சட்​ட​விரோத பணப்​பரி​மாற்ற தடைச் சட்​டத்​தின் கீழ் வழக்​குப் பதிவு செய்​து, விசா​ரணையை தொடங்​கினர்.

வழக்​குக்​கான ஆதா​ரங்​களைத் திரட்​டும் வகை​யில், வியாசர்​பாடி சாஸ்​திரி நகரில் யேசு​ராஜ் வீடு, அவருடன் நெருங்​கிய தொடர்​பில் உள்ள கொடுங்​கையூர் திரு​வள்​ளுவர் நகர் பகு​தி​யில் உள்ள ஜான் பிரிட்டோ வீடு, பிலோமன் பிர​காஷ் வீடு ஆகிய இடங்​களில் அமலாக்​கத் துறை​யினர் நேற்று திடீர் சோதனை நடத்​தினர்.

சோதனையை ஒட்​டி, அங்கு துப்​பாக்கி ஏந்​திய துணை ராணுவப் படை​யினர் பாது​காப்​புக்​காக குவிக்​கப்​பட்​டிருந்​தனர்.

பல மணி நேரம் நடை​பெற்ற சோதனை​யில், வழக்​குத் தொடர்​பாக பல்​வேறு முக்​கிய ஆவணங்​கள் கைப்​பற்​றப்​பட்​ட​தாக கூறப்​படு​கிறது.

சோதனை முழு​மை​யாக முடிவடைந்த பின்​னரே கைப்​பற்​றப்​பட்ட ஆவணங்​கள் குறித்த விவரங்​களைத் தெரிவிக்க முடி​யும் என்று அமலாக்​கத்​ துறை தரப்​பில்​ தெரி​விக்​கப்​பட்​டது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *