‘தாய் கிழவி’ இயக்குநர் சிவகுமார் முருகேசனுக்கு, தயாரிப்பாளர் சிவகார்த்தி கேயன் கார் பரிசு!!

சென்னை:
சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா சரத்குமார் மூதாட்டியாக நடித்த படம், ‘தாய் கிழவி’.

பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக் ஷன்ஸ் இணைந்து தயாரித்த இப்படத்தில் சிங்கம்புலி, அருள் தாஸ், பால சரவணன், ரேய்ச்சல் ரெபேகா, முத்துக் குமார், முனீஷ் காந்த் உள்பட பலர் நடித்திருந்தனர். இப்படம் பிப்.27-ல் வெளியானது.

மதுரை பின்னணியில், பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு உருவான இப்படம், திரையரங்குகளில் 100 நாட்களை கடந்தது.

ஓடிடி- யிலும் வரவேற்பைப் பெற்ற இத்திரைப்படத்தின் 100-வது நாள் விழா சென்னையில் நடைபெற்றது.

இதில், படத்தில் நடித்தவர்கள் மற்றும் டெக்னீஷியன்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

இயக்குநர் சிவகுமார் முருகேசனுக்கு, தயாரிப்பாளர் களான சிவகார்த்திகேயன் மற்றும் சுதன் சுந்தரம் இணைந்து கார் ஒன்றை பரிசாக வழங்கினர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *