தலை​மைச் செயல​கத்​தில் பணிபுரி​யும் மனிதவளத் துறை அரசுப் பணி​யாளர்​களுக்கு முக அடை​யாள பயோமெட்ரிக் வரு​கைப்​ப​திவு அமல்!!

சென்னை:
தலை​மைச் செயல​கத்​தில் பணிபுரி​யும் மனிதவளத் துறை அரசுப் பணி​யாளர்​களுக்கு முக அடை​யாள பயோமெட்ரிக் வரு​கைப்​ப​திவு முறை அமல்​படுத்​தப்​பட்​டுள்​ளது.

சென்னை புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்​தில் உள்ள தலை​மைச் செயல​கத்​தில் முதல்​வர், அமைச்​சர்​களின் அலு​வல​கங்​கள் உள்​ளன.

மேலும், நாமக்​கல் கவிஞர் மாளிகை கட்​டிடத்​தில் 54 துறை செயலர்​கள், பல்​வேறு நிலைகளில் உள்ள அதி​காரி​கள் என 5 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்​டோர் பணி​யாற்​றிவரு​கின்​றனர்.

இவர்​களுக்கு காலை 10 முதல் மாலை 5.45 மணி வரை அலு​வல் பணி நேர​மாக உள்​ளது. இதற்​கிடையே சிற்​றுண்​டி, உணவு இடைவேளை​யும் வழங்​கப்​படு​கிறது.

இந்​நிலை​யில், தலை​மைச் செயல​கத்​தில் மனிதவளத் துறை​யில் பணிபுரி​யும் பணி​யாளர்​களுக்கு முக அடை​யாள பயோமெட்​ரிக் வரு​கைப் பதிவு முறை நேற்று முதல் அமல்​படுத்​தப்​பட்​டது.

இதற்​கான பயோமெட்​ரிக் மற்​றும் முகம் காணும் தொடு​திரை இயந்​திரம் அலு​வலக முகப்​பில் நிறு​வப்​பட்​டுள்​ளது.

இதையடுத்து துறை அலு​வலர்​கள், பணி​யாளர்​கள் தங்​களின் வரு​கையை பதிவுசெய்ய பயோமெட்​ரிக் முறையை கடைப்​பிடிக்க வேண்​டுமென கட்​டாய​மாக்​கப்​பட்​டுள்​ளது.

அதன்​படி, காலை வழக்​கம்​போல் அலு​வல​கம் வருகை தந்த மனித வளத்​துறை பணி​யாளர்​கள் தங்​களின் வரு​கையை புதிய நடை​முறை​யின்​படி பதிவுசெய்​தனர்.

இதைத் தொடர்ந்து மற்ற துறை​களுக்​கும் விரை​வில் பயோமெட்​ரிக் வரு​கைப்​ப​திவு திட்​டத்தை விரிவுபடுத்த தமிழக அரசு திட்​ட​மிட்​டுள்​ள​தாக கூறப்​படு​கிறது.

கடந்த ஆட்​சி​யில் பயோமெட்​ரிக் முறை அமலான போது தலை​மைச் செயலக பணி​யாளர் சங்​கம் கடும் எதிர்ப்பு தெரி​வித்​த​தால் அந்த உத்​தரவு திரும்​பப் பெறப்​பட்​டது என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *