இன்னும் தேர்தல் பிரச்சார மூடில் இருந்து வெளிய வராத மாதிரி தோன்றுகிறது – விஜய் அரசு மீது தமிழிசை சாடல்!!

சென்னை:
“முதல்வர் விஜய் இன்னும் தேர்தல் பிரச்சார மூடில் இருந்து வெளியே வராதது மாதிரி தோன்றுகிறது.

போர்க்கால அடிப்படையில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” என பாஜக மூத்த தலைவர் தமிழிசை கூறியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு, மற்ற கட்சிகளிடமிருந்து ஆதரவை பெறுகின்ற ஆர்வம், மக்களுக்கான பிரச்சினைகளை தீர்ப்பதில் இல்லையோ என எண்ணத் தோன்றுகிறது.

திருவள்ளுவர் காவி நிறம்தான் உடுத்தியிருக்கிறார்; திருநீறு தான் வைத்திருந்தார். ஆரம்ப கால புத்தகங்கள் எல்லாம் இதைத்தான் உருவகப்படுத்தி இருக்கிறது.

நூலகத்துக்கு சென்று பாருங்கள். 60, 70 வருடங்களுக்கு முன்னால் பதிப்பிக்கப்பட்ட திருவள்ளுவர் காவியுடை தான் அணிந்து இருக்கிறார். இதுதான் அசல்.

பாஜக மக்களால் நிராகரிக்கப்படவில்லை. ஒரு சின்ன பின்ன டைவுதான். நிச்சயமாக நாங்கள் மீண்டு வருவோம்.

தமிழகத்தில் பாஜகவுக்கு தனி இடம் உண்டு. நாங்கள் மக்களுக்காக பேசுவர்கள். இன்று அரசியல் சூழல் மாறியிருக்கிறது. முதல்வரே தோற்கக்கூடிய நிலை இருக்கிறது.

முதல்வர் விஜய் நேற்று திருச்சி சென்றிருந்தார். அவர் இன்னும் தேர் தல் பிரச்சார மூடில் இருந்து வெளிய வராத மாதிரி தோன்றுகிறது.

முதல்வர் ஆகிவிட்டார்; மக்கள் உங்கள் வாய்ப்புகளை கொடுத்திருக் கின்றனர். போர்க்கால அடிப்படையில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்கத் தான் செய்வார்கள்” என்று அவர் கூறியுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *