உண்​மை​யான கூட்​டாட்​சியை வலுப்​படுத்​துவோம்: மாநில முதல்வர்கள், கட்சித் தலைவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!!

சென்னை:
மத்​திய – மாநில அதி​காரங்​களை மறு​பரிசீலனை செய்​து, உண்​மை​யான கூட்​டாட்​சியை வலுப்​படுத்​தும் எதிர்​கால கட்டமைப்பை அரசி​யல் மற்​றும் கட்சி வேறு​பாடு​களுக்கு அப்​பாற்​பட்டு அனை​வரும் இணைந்து உரு​வாக்க வேண்​டும் என்​று, மாநில முதல்​வர்​கள், பல்​வேறு கட்​சித் தலை​வர்​களுக்கு எழு​திய கடிதத்​தில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் வேண்​டு​கோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்​து, அவர் நேற்று எழு​தி​யுள்ள கடிதம்: கடந்த 1935-ம் ஆண்டு இந்​திய அரசுச் சட்​டத்​திலிருந்து குறிப்​பிடத்​தக்க வகை​யில் வடிவ​மைக்​கப்​பட்ட இந்​திய அரசமைப்​பானது, மத்​திய அரசுக்​கும், மாநிலங்​களுக்​கும் இடை​யில் சிறந்​ததொரு அதி​கார சமநிலையுடன் கூடிய கூட்​டாட்சி கட்​டமைப்​பினை உரு​வாக்​கியது.

இருப்​பினும், பல ஆண்​டு​களாக இந்த சமநிலை தொடர்ந்து மாற்​றப்​பட்டு, வலு​வான மத்​திய அரசும், வலு​வான மாநிலங்​களும் முரண்​பட்​டிருக்​காமல், ஒன்​றையொன்று சார்ந்​து, ஒவ்​வொன்​றும் மற்​றவற்​றின் வளர்ச்​சிக்கு உறு​துணை​யாக இருக்க வேண்​டும்.

கடந்த 1969-ம் ஆண்டு முதல்​வ​ராக கருணாநிதி இருந்​த​போது, மத்​திய- மாநில உறவு​கள் குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்க நீதிபதி பி.​வி.​ராஜமன்​னார் தலை​மை​யில் முதல் குழுவை அமைத்​தார்.

கடந்த 1971-ல் இந்​தக் குழு அளித்த அறிக்​கை, இந்​தி​யா​வில் கூட்​டாட்சி குறித்த விவாதங்​களை வடிவ​மைப்​ப​தில் ஒரு மைல்​கல்​லாக அமைந்​தது.

அதன்​பின், மத்​திய அரசு சர்க்​காரியா கமிஷன் (1983 – 1988) மற்​றும் புஞ்சி கமிஷன் (2007 – 2010) ஆகிய​வற்றை அமைத்​தது.

இரண்​டும் அதி​காரப் பகிர்வு குறித்து விரி​வான முறை​யில் ஆராய்ந்தன என்​றாலும், அவற்​றின் பரிந்​துரைகள் உண்​மை​யான, சமநிலை​யான கூட்​டாட்​சிக் கட்​டமைப்பை ஏற்​படுத்​து​வதற்கு உதவ​வில்​லை.

இதற்​கிடை​யில், தொடர்ச்​சி​யான அரசி​யலமைப்பு திருத்​தங்​கள், யூனியன் சட்​டங்​கள் மற்​றும் மத்​திய அரசின் கொள்​கைகள், அதி​கார சமநிலையை மத்​திய அரசுக்​குச் சாதக​மாக சாய்த்​துள்​ளன.

இன்​று, மத்​திய-மாநில அதி​காரங்​களில் உள்ள இந்த முன்​னேற்​றங்​களை தீர்க்​க​மாக மறு​பரிசீலனை செய்​து, உண்​மை​யான கூட்​டாட்​சியை வலுப்​படுத்​தும் எதிர்​கால கட்​டமைப்பை உரு​வாக்​கு​வதே காலத்​தின் தேவை.

இந்த நோக்​கத்​தின் அடிப்​படை​யில், மத்​திய-மாநில உறவு​கள் குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்க, ஓய்​வு​பெற்ற உச்ச நீதி​மன்ற நீதிபதி குரியன் ஜோசப்பை தலை​வ​ராக​வும் ஓய்​வு​பெற்ற ஐஏஎஸ் அதி​காரி கே.அசோக் வரதன் ஷெட்​டி, முன்​னாள் திட்​டக்குழுத் துணைத் தலை​வர் மு.​நாகநாதன் ஆகியோரை உறுப்​பினர்​களாகக் கொண்​டும், உயர்​நிலைக் குழு ஒன்றை தமிழக அரசு அமைத்​துள்​ளது.

இக்​குழு​வின் பணி செம்​மை​யுற அமை​யும் வகை​யில், அனைத்து மாநிலங்​கள் மற்​றும் யூனியன் பிரதேசங்​களின் பரிசீலிக்​கப்​பட்ட கருத்​துக்​களைப் பெற ஏது​வாக, ஒரு கேள்​வித்​தாளை இக்​குழு தயாரித்​துள்​ளது. அதனை ‘https://hlcusr.tn.gov.in/’ என்ற இணை​ய தளத்​தில் காணலாம்.

இந்த விஷ​யத்​தில் மாநில முதல்​வர்​களும், பல்​வேறு கட்​சித் தலை​வர்​களும் கவனம் செலுத்​தி, உயர்​நிலைக் குழு​வின் வினாத்​தாளினை ஆராய்ந்​து, விரி​வான பதில்​களை வழங்க வேண்​டும்.

அனைத்து மாநிலங்​களின் ஒட்​டுமொத்த விருப்​பத்​தைப் பிர​திபலிக்​கும் ஒரு ஆவணத்தை வடிவ​மைப்​ப​தி​லும், நமது நாட்​டின் கூட்​டாட்சி அடித்​தளங்​களை வலுப்​படுத்​து​வ​தி​லும் மாநில முதல்​வர்​கள் மற்​றும் கட்​சித் தலை​வர்​களின் தீவிர பங்​கேற்பு மிக முக்​கிய​மான​தாக விளங்​கும்.

இந்த முயற்சி அரசி​யல் மற்​றும் கட்சி வேறு​பாடு​களுக்கு அப்​பாற்​பட்டு நிற்​ப​தாக, ஒன்​றாக நமது அரசி​யலமைப்​பின் கூட்​டாட்சி உணர்​வைப் புதுப்​பித்து எதிர்​கால சந்​த​தி​யினருக்கு வலு​வான, ஒன்​று​பட்ட மற்​றும் உண்​மை​யான கூட்​டாட்சி கொண்ட ஒரு அரசை வழங்​கு​வோம்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *