முதல்வரின் தனிப் பிரிவில் சிறப்பு மனுப்பெட்டி: தவெக ஆட்​சிக்கு வந்​த​பின் மனு அளிக்க வரும் பொது​மக்​களின் எண்​ணிக்கை தொடர்ந்து அதி​கரித்து வரு​கிறது!!

சென்னை:
முதல்​வரின் தனிப்​பிரி​வில் கோரிக்கை மனு அளிக்க வருபவர்​களின் எண்​ணிக்கை அதி​கரிப்​ப​தால், தலை​மைச் செயல​கத்​துக்கு வெளியே சிறப்பு மனுப்பெட்டி வைக்​கப்​பட்​டுள்​ளது.

சென்​னை, தலை​மைச் செயல​கத்​தில் உள்ள முதல்​வரின் தனிப் பிரி​வில், பொதுமக்கள் தங்​களின் கோரிக்கைகளை பதிவு செய்து வரு​கின்​றனர்.

தவெக ஆட்​சிக்கு வந்​த​பின் மனு அளிக்க வரும் பொது​மக்​களின் எண்​ணிக்கை தொடர்ந்து அதி​கரித்து வரு​கிறது.

குடிநீர், வீட்​டுமனை பட்​டா, வேலை​வாய்ப்பு உள்​ளிட்ட பல்​வேறு கோரிக்​கைகளை முன்​வைத்து பொது​மக்​கள் மனு அளித்து வரு​கின்​றனர். இதனால், தலை​மைச் செயல​கத்​தில் மக்​கள் கூட்​டம் அதி​கரித்​துள்​ளது.

இந்​நிலை​யில், கூட்ட நெரிசலை தவிர்க்​க​வும், மனுக்​களை எளி​தாகப் பெற​வும், தலை​மைச் செயல​கத்​துக்கு வெளியே முதல்​வரின் தனிப்​பிரிவு சிறப்பு மனுப் பெட்டி வைக்​கப்​பட்​டுள்​ளது.

இதன் மூலம், தலை​மைச் செயல​கத்​துக்கு வரும் பொது​மக்​கள், தங்​கள் கோரிக்கை மனுக்​களை அந்​தப் பெட்​டி​யில் நேரடி​யாக செலுத்​தலாம். அந்த மனுக்​கள் உரிய பதிவு​களு​டன் சம்​பந்​தப்​பட்ட துறை​களுக்கு அனுப்​பப்​பட்டு நடவடிக்​கைக்​காக பரிசீலிக்​கப்​படும்.

அதே சமயம், அதி​காரி​களை நேரில் சந்​தித்து மனு தர விரும்​புபவர்​கள் வழக்​கம்​போல் முதல்​வரின் தனிப்​பிரிவு அலு​வல​கம் வந்து மனுக்​களை வழங்​க​வும் ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ள​தாக அதி​காரிகள் தெரிவித்தனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *