சொன்​னதை நிறைவேற்​றி​ய நடிகர் அதர்வா!!

சென்னை:
அதர்வா முரளி நாயக​னாக நடித்​துள்ள ‘இத​யம் முரளி’, கடந்த 10ம் தேதி வெளி​யானது.

இதில் கயாது லோஹர், ப்ரீத்தி முகுந்​தன், பரிதாபங்​கள் சுதாகர், ராபர்ட், இசை அமைப்​பாளர் தமன், ரக் ஷன் என பலர் நடித்​துள்​ளனர். டான் பிக்​சர்ஸ் சார்​பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து இயக்​கி​னார்.

இந்​தப் படம் வரவேற்​பைப் பெற்​றதை அடுத்து படக்​குழு​வினர் செய்​தி​யாளர்​களைச் சந்தித்தனர்.

அப்​போது, அதர்வா முரளி கூறும்​போது, “இந்​தப்​ படத்​தின் பயணம் தொடங்கி மூன்​றரை ஆண்​டு​கள் ஆகி​விட்​டன.

இயக்குநர் ஆகாஷ் பாஸ்​கரனை முதன்​முதலாக இயக்​குந​ராகவே சந்​தித்​தேன்.

அந்​தச் சந்​திப்​பிலேயே இந்​தப் படத்​தின் தலைப்​பு, தோற்​றம், உணர்வு என அனைத்​தை​யும் பற்றி அவர் பகிர்ந்​து கொண்​டார்.

இன்று அந்​தக் கனவை நினைத்​த​படியே திரை​யில் கொண்டு வந்​திருக்​கிறோம் என நம்​பு​கிறேன்.

இதன் படப்​பிடிப்பு மிக​வும் மகிழ்ச்​சி​யான சூழலில் நடந்​தது. இந்தப் படம் எனக்கு பல அழகான நினை​வு​களை கொடுத்திருக்கிறது.

குறிப்​பாக ‘இத​யம் முரளி’ என்ற தலைப்பு என் மனதுக்கு மிக​வும் நெருக்​க​மானது. முதலில் இந்​தத் தலைப்பை கேட்​ட​போது, ‘இது சரி​யாக அமை​யு​மா?’ என்று ஆகாஷிடம் கேட்டேன்.

‘என்னை நம்​புங்​கள், இது நல்ல படமாக வரும்’ என்​றார். அவர் சொன்​னதை நிறைவேற்​றி​யிருக்​கிறார்.

இந்​தத் தலைப்​பின் மூலம் என் அப்பா முரளிக்கு சிறிய மரி​யாதை செலுத்த வேண்​டும் என்று நினைத்​தேன். ஆனால் ஒரு நண்​ப​ராக ஆகாஷ் அதை அழகாக செய்து காட்​டி​யிருக்​கிறார்.

அது எனக்கு பெரிய மகிழ்ச்​சியை அளிக்​கிறது” என்​றார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *