திண்டுக்கல் மாவட்டத்தில் ஆட்சியர் முதல் பல்வேறு உயர் பொறுப்புகளில் மகளிர் அதிகம் இடம் பெற்றுள்ளதால், மாவட்டம் முழுவதும் மகளிரின் ஆளுமைகள்!!

திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் ஆட்சியர் முதல் பல்வேறு உயர் பொறுப்புகளில் மகளிர் அதிகம் இடம் பெற்றுள்ளதால், மாவட்டம் முழுவதும் மகளிரின் ஆளுமையின் கீழ் செயல்பட்டு வருகிறது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக துர்காமூர்த்தி சில நாட்களுக்கு முன்பு பொறுப்பேற்றார்.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட வருவாய் அலுவல ராக ஜெயபாரதி பணிபுரிந்து வருகிறார். மாவட்டத்தில் வருவாய்த்துறை முழுவதும் இவரது கட்டுப்பாட்டில் உள்ளது.

மாவட்டத்தின் அடுத்த உயர் பதவியான மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநராக கங்காதரணி பணியாற்றி வருகிறார்.

மாவட்டத் தில் உள்ள அனைத்து ஊராட்சிகளில் வளர்ச்சிப் பணிகளை இவர் கவனித்து வருகிறார்.

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஜெயந்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலக நிர்வா கத்தைக் கவனித்து வருகிறார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக உஷா பணியில் உள்ளார்.

மாவட்ட சமூக நல அலுவலர் கரோலின் செல்வராணி, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் பூங்கொடி, தோட்டக் கலைத்துறை துணை இயக்குநர் காயத்திரி, மாவட்ட ஊராட்சிச் செயலர் ராஜேஸ் வரி, கொடைக்கானல் கோட்டாட்சியராக கீர்த்தனா என பல்வேறு தலைமைப் பணியிடங்களில் மகளிரே, திண்டுக்கல் மாவட் டத்தில் பணியில் உள்ளனர்.

மாவட்ட முதன்மை நீதிபதியாக முத்து சாரதா பணியில் உள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் உயர் பதவிகளில் பெண்களே அதிகம் உள்ளனர்.

இதன் மூலம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி பொறுப்பேற்றபோது, பெண் களுடைய நலன், பாதுகாப்பு, வாழ்வாதாரம், குழந்தைகள் நலன் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன் என்று கூறியதை முழுமையாக செயல்படுத்தவும், அரசின் திட்டங்களைக் கடைக்கோடி மக்களுக்குச் சென்றடைவதை உறுதி செய்வதிலும் இந்த மகளிர் ஆளுமைகள் திறம்படச் செயல்படுவர் என்ற எதிர்பார்ப்பு மாவட்ட மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *