தென் கொரியாவில் அமைச்சர் கீர்த்தனா!!

தென் கொரியா;
தமிழ்நாட்டில் த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாதென்கொரியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.


தென் கொரியாவில் ஹூண்டாய் ஹெவி இண்டஸ்ட்ரீஸ் (HHI) நிறுவன உயர் அதிகாரிகளுடன் தமிழக அமைச்சர் கீர்த்தனா சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இச்சந்திப்பின் போது தூத்துக்குடியில் முன்மொழியப்பட்டுள்ள கப்பல் கட்டும் தளம் குறித்து HHI அதிகாரிகளுடன் அமைச்சர் கீர்த்தனா ஆலோசனை மேற்கொண்டார்.

மேலும் கப்பல் கட்டும் திட்டத்தை செயல்படுத்த HHI நிறுவனத்திற்கு உரிய வழிவகை செய்யப்படும் என்று அமைச்சர் கீர்த்தனா வாக்குறுதி அளித்துள்ளார்.

இதுதொடர்பாக Guidance Tamil Nadu எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தூத்துக்குடி கப்பல் கட்டும் தளம் திட்டத்தில் முன்னேற்றத்தை உறுதி செய்துள்ளதாகவும் சர்வதேச முதலீட்டை ஈர்த்து, தொழில்துறையை முன்னேற்றுவதில் அரசு உறுதியுடன் இருப்பதாகவும் பதிவிடப்பட்டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *