பொது மக்​கள் அனை​வரும் நாள்​தோறும் யோகா செய்ய வேண்​டும் – தமிழ்​நாடு வேளாண்மை பல்​கலைக்​கழக நிகழ்​வில் பங்​கேற்ற ஆளுநர் அர்​லேகர் அறி​வுறுத்​தல்!!

கோவை:
பொது மக்​கள் அனை​வரும் நாள்​தோறும் யோகா செய்ய வேண்​டும் என தமிழ்​நாடு வேளாண்மை பல்​கலைக்​கழக நிகழ்​வில் பங்​கேற்ற ஆளுநர் அர்​லேகர் அறி​வுறுத்​தி​னார்.

சர்​வ​தேச யோகா தினத்தை முன்​னிட்​டு, கோவை​யில் உள்ள தமிழ்​நாடு வேளாண்மை பல்​கலைக்​கழகத்​தில் நடை​பெற்ற பிரம்​மாண்ட யோகா நிகழ்​வில் தமிழக ஆளுநர் ராஜேந்​திர விஸ்​வ​நாத் அர்​லேகர், சிறப்பு விருந்​தின​ராக பங்​கேற்​றார்.

இதில் பள்ளி மற்​றும் கல்​லூரி மாணவர்​கள் 1,564 பேர் பங்​கேற்​றனர்.

இதையடுத்​து, ஆளுநர் பேசி​ய​தாவது: யோகா என்​பதை ஒரு​நாள் மட்​டும் கொண்​டாட்​ட​மாக கரு​தாமல், ஆண்டு முழு​வதும் தின​மும் கடைபிடிக்க வேண்​டும்.

பிரதமர் மோடி​யின் முன்​னெடுப்​பால் சர்​வ​தேச அளவில் யோகா கலை கொண்டு செல்​லப்​பட்​டுள்​ளது.

மனித குல நன்​மைக்​காக நமது ரிஷிகளும், முனிகளும் வழங்​கிய யோகா கலை, உலகுக்கு இந்​தியா அளித்த கொடை​யாகும். உடலும், ஆன்​மா​வும் ஒரு சேர பேணுவதே உண்​மை​யான ஆரோக்​கி​யம்.

ஆரோக்​கிய​மான உடல், அமை​தி​யான மனம் மற்​றும் வலிமை​யான ஆன்​மாவுக்​காக யோகாவை அனை​வரும் தின​மும் கடைபிடிக்க வேண்​டும்.

அனைத்து வயதினருக்​கும் யோகா பலன் அளிக்​கும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

நிகழ்​வில் பல்​கலைக்​கழக துணைவேந்​தர் (பொ) சுப்​பிரமணி​யன் மற்​றும் துறை பேராசிரியர்​கள் பங்​கேற்​றனர். பல்​கலைக்​கழக வளாகத்​தில் மரக்​கன்றை ஆளுநர் நட்டு வைத்​தார்.

முன்​ன​தாக, மேற்​கு​ வங்​கத்​தில் பிரதமர் பங்​கேற்ற சர்​வ​தேச யோகா தின நிகழ்ச்சி நேரலை செய்​யப்​பட்​டதை அனை​வரும் பார்​வை​யிட்​டனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *